11 வயதிலேயே அஜித்தை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட பேராண்மை பட நடிகை.? இதுதான் பிஞ்சிலேயே கொடுக்கிறதா.?

Ajith : தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்.. இவர் சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி எல்லோருக்கும் பிடித்தவராக இருப்பதால் இவருக்கு அசைக்க முடியாத ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன.. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்னும் படம் உருவாக இருக்கின்றன.

அந்த படத்தின் ஷுட்டிங்காக அஜித் வெளி நாட்டுக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.. இந்த படம் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருக்கின்றன மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.. இந்நிலையில் நடிகர் அஜித் அண்மை காலமாக தொடர்ந்து ஆக்சன் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் இவரது ஆரம்ப காலகட்டத்தில் குடும்பம் மற்றும் காதல் போன்ற படங்களில் நடித்து தான் பிரபலமடைந்தார்.

அப்படி அஜித் கேரியரில் முக்கிய படங்களில் ஒன்று “நீ வருவாய் என “. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சரண்யா நாக் என்பவர் நடித்திருந்தார் இவர் காதல் படத்தில்  சந்தியாவுக்கு தோழியாக நடித்து பிரபலமடைந்தவர்.. நீ வருவாய் என படத்தில் அஜித் மற்றும் தேவயானிக்கு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது நடிகை சரண்யா நாக் ஓரமாக உட்கார்ந்து அஜித்தையே பார்த்துக் கொண்டிருந்தாராம்..

பிறகு இடைவெளி நேரத்தில் அஜித்திடம் ஓடி உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார் அதற்கு அஜித் அண்ணன்னு சொல்ல மாட்டீங்க, சார் என்றும் கூப்பிட மாட்டீங்க அப்புறம் எதுக்கு புகைப்படம் எடுக்கணும் என்று கேட்க சரண்யா, போட்டோ எடுத்துக்கணும் என்று கேட்டுக் கொண்டே இருந்தாராம் பிறகு அஜித் கேமரா மேனை கூப்பிட்டு புகைப்படம் எடுக்க சொன்னாராம்..

ajith
ajith

மீண்டும் சரண்யா அஜித்தையே பார்த்துக்கொண்டே இருந்ததால் அஜித் என்ன பாத்துட்டு இருக்க என கேட்க, அதற்கு சரண்யா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்டு இருக்கிறார், அதற்கு அஜித் வெக்கப்பட பிறகு சரண்யா கொஞ்ச நாள் கழிச்சு நானே வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லி விட்டு ஓடி விட்டாராம்..

saranya nag
saranya nag