இயக்குனரிடம் திமிரு காட்டிய நடிகை.. கடைசில இப்படி ஆயிடுச்சே

அந்த பெரிய இயக்குனர் படத்தில் நடித்துவிட மாட்டோமா என ஒவ்வொரு பிரபலமும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அவருடைய படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என முயற்சி செய்பவர்களும் உண்டு.

ஆனால் இந்த நடிகை மட்டும் அதில் விதிவிலக்கு எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் கவலை இல்லை என்பது போல் அவர் நடந்து கொண்டதுதான் இப்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக்.

சமீபத்தில் நடிகை நடித்த படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. அதனால் அவரை தங்களுடைய படங்களில் கமிட் செய்ய எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் நடிகை வருகிற வாய்ப்பை எல்லாம் வாங்கி போட்டுக் கொள்பவர் கிடையாது.

அவருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிப்பார். அதில் அந்த பெரிய இயக்குனர் இந்த நடிகையை கமிட் செய்ய விரும்பியிருக்கிறார். ஆனால் நடிகை கதையை சொல்லுங்க பிடிச்சிருந்தா கேட்கலாம் என்பது போல் பதில் கொடுத்து இருக்கிறார்.

இது இயக்குனருக்கு கோபத்தை வரவழைத்து விட்டது. ஏனென்றால் இவரிடம் இருந்து அழைப்பு வந்தால் யாரும் கதையை கேட்க மாட்டார்கள். உடனே சம்மதம் சொல்லிவிடுவார்கள்.

ஆனால் இந்த நடிகை இப்படி பேசியது அவரை அப்செட் ஆக்கிவிட்டதாம். அதனால் வேறு ஒரு நடிகையிடம் தற்போது அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.