மாஸ்டர் படத்தில் விஜய் முக்கியமான ரோலில் பேசும் போது சிரித்த நடிகை.! வீடியோவை பார்த்து கடுப்பான தளபதி ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார்.

இத்திரைப்படம் கடந்த மாதம் பொங்கல் அன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தளபதி விஜய்யின் சமீபகால திரைப்படங்கள் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது அதுபோல மாஸ்டர் திரைப்படமும் 200 கோடி வசூல் வேட்டை நடத்தியது.

மாஸ்டர் திரைப்படம் ஒருபக்கம் திரையரங்கை நல்ல வரவேற்ப்பை பெற்று கூடிக் கொண்டே இருந்தாலும் அதே சமயம் ஊட்டி தளத்திலும் விற்று நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமேசான் பிரைம்  நேற்று மாஸ்டர் திரைப்படத்தில் டெலிட் ஆன காட்சிகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

அந்த சீனில் விஜய் பெண்களின் ஆடை குறித்து சிறப்பாக பேசிக்கொண்டிருப்பார் அதனிடை அந்த காட்சியில் கௌரி கிஷன் ஒருபக்கம் சிரித்துக் கொண்டிருப்பார்.

இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் தற்போது அந்த நடிகையை கலாய்த்து வருகின்றனர்.

Leave a Comment