தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித் இவர் தற்பொழுது வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தை எச் வினோத் அவர்கள் இயக்குகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் அவர்கள் மீண்டும் இப்படத்தையும் தயாரிக்கிறார்.
சமீபகாலமாக அஜித் அவர்கள் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உங்களுக்கு விருந்து படைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக விசுவாசம், நேர்கொண்டபார்வை போன்ற மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அஜித் அவர்கள் தற்போது வலிமை படத்தையும் சிறப்பாக கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இப்படத்தின் சூட்டிங் முதல்பாதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கபட்டு வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் இப்படத்தில் ஹீரோயின் யார் என்று தெரியாத வண்ணமே படக்குழுவினர் காத்து வருகின்றனர்.
அதேபோல் வில்லன்கள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியாத வண்ணமே இருந்து வருகிறது. மேலும் அஜித் ரசிகர்கள் போனிகபூர் மற்றும் இயக்குனர் ஆகியவர்களை சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்டு கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் எந்த ஒரு பதிலையும் படக்குழுவினர் மற்றும் யாரும் அறிவிக்காத நிலையே இருந்து வருகிறது.
இந்த நிலையில் அஜித்தின் வலிமை படத்தில் பிரபல நடிகரான பானு பிரகாஷ் மகன் ராஜ் ஐயப்பா வலிமை படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகிறது.பானு பிரகாஷ் அவர்கள் அஜித் நடித்த அமராவதி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் நண்பர்கள் ஆவார்கள் ராஜ் ஐயப்பா அவர்கள் அதர்வா நடித்த 100 என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
100 படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதனால் இப்படத்தில் கமிட் ஆக வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் ராஜ் ஐய்யப்பா தல அஜித்தின் தீவிர ரசிகராம். பானு அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் அவருடன் தொழில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்பொழுது தனது பையனை பற்றி கேட்டார் அப்பொழுது நான் எனது மகனுடைய புகைப்படத்தை அனுப்பி வைத்தேன் அதை பார்த்துவிட்டு அதற்கு உங்கள் பையன் மிக அழகாக இருக்கிறான் சினிமாவில் நடிக்க வையுங்கள் என்று சொன்னார் அஜித் அதிலிருந்து தான் சினிமாவில் நடிக்க வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.