அந்த நடிகர் தன் மனைவியை பிரிந்தது இப்போது வரை சர்ச்சையாக தான் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நடிகர் தான் உண்டு தன் வேலை உண்டு என பிசியாக இருக்கிறார்.
அவருடைய முன்னாள் மனைவியும் தன் போக்கில் இருக்கிறார். ஆனால் மகளின் நிலையை நினைத்து பெரிய நடிகருக்கு தான் தூக்கம் வரவில்லையாம்.
எப்படியாவது மகளுக்கு ஒரு நல்லது செய்து விட வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம். இன்னொரு திருமண பேச்சு கூட எடுத்திருக்கிறார்.
ஆனால் மகள் முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டாராம். இருந்தாலும் கூட முன்னாள் காதலரை நினைத்து அவர் இப்போது வருந்தி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்து உள்ளது.
இந்த நடிகரை திருமணம் செய்வதற்கு முன்பு அவர் வாரிசு நடிகரை காதலித்து வந்தார். அந்த கதை எல்லோருக்கும் தெரியும். சின்ன ஹீரோ பிரச்சனை தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என கூறுகின்றனர்.
ஒரு வேளை அந்த நடிகரையே காதலித்து திருமணம் செய்திருந்தால் இப்படி ஒரு நிலை தனக்கு வந்திருக்காது. முன்னாள் கணவர் போல் அவர் தனக்கு துரோகம் செய்திருக்க மாட்டார். நிச்சயம் தன் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் என இப்போது நடிகரின் மனைவி வருத்தப்படுகிறாராம்.
ஆனால் இப்போது வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் என கோடம்பாக்க வட்டாரத்தில் சத்தமில்லாமல் பேசி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அந்த வாரிசு நடிகர் பல காதல்களை கடந்து இன்னும் சிங்கிளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.