ரஜினிக்கு வில்லனாக நடித்து தனது சினிமா கேரியருக்கே ஆப்பு வைத்துக் கொண்ட மூத்த நடிகர்.! இவருக்கு இப்படி ஒரு நிலைமை..

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக பார்க்கப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இப்பொழுது தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்து லைக்கா நிறுவனத்துடன் இரண்டு படம் பண்ண இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பரான தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் உலா வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க பல நடிகர்கள் ஆசைப்படுவது வழக்கம் அதற்கு காரணம் இருக்கிறது ரஜினி படத்தில் நடித்தால் நாமும் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடையலாம் என பல நடிக்கின்றனர் ஆனால் ரஜினி படத்தில் ஒரு சிலர் நடித்து அவரது கேரியருக்கு ஆப்பு வைத்தும் கொண்டுள்ளனர் அப்படி ஒரு சம்பவம் தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

60களில் எம்ஜிஆர் சிவாஜி போன்ற நடிகர்களுக்கு டஃப் கொடுத்தவர் ஜெய்சங்கர் இவர் 125க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் ரசிகர்கள் ஜெய்சங்கரை செல்லமாக தென்னகத்தை ஜேம்ஸ் பாண்ட், சிஐடி ஷங்கர் என அழைத்தனர் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் 1980 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான முரட்டுக்காளை திரைப்படத்தில் முதன்முதலாக வில்லனாக நடித்தார்.

அதுவும் ரஜினிக்கு வில்லனாக அவர் நடித்தார். அந்த படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது ஜெய்சங்கரும் வில்லன் கதாபாத்திரத்தில் சூப்பராக வெற்றியை கண்டார் ஆனால் ரசிகர்கள் அதற்கு அப்புறம் ஜெய்சங்கரை ஒரு வில்லனாகவே பார்க்கத் தொடங்கினார். இந்தப் படத்திற்கு பிறகு ஜெய்சங்கர் 5 படங்களில் ஹீரோவாக நடித்தார்.

அந்த ஐந்து திரைப்படங்களுமே மிகப்பெரிய ஒரு தோல்வி படங்களாக மாறியது ஒரு கட்டத்தில் இதை உணர்ந்து கொண்ட ஜெய்சங்கர் இனி ஹீரோவாக நடித்தால் வேலைக்காகாது என கருதி கடைசி காலகட்டத்தில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹீரோ என்ற இமேஜை கடைசி நேரத்தில் ஜெய்சங்கர் இழந்தார்.

Leave a Comment