ஆலியா மானசாவுக்கு ஜோடியாகும் விஜய் டிவியிலிருந்து துரத்தி விடப்பட்ட நடிகர்.! மாஸ் காட்டும் சன் டிவி..

0
ALIYA-MANASA
ALIYA-MANASA

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் விஜய் டிவியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்த சீரியல் தான் ராஜா ராணி.

இந்த சீரியலின் மூலம் ஆலியா மானசா, சஞ்சீவ் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பட்டிதட்டி எங்கும் பிரபலமடைந்தார்கள். இந்த சீரியலில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு இந்த சீரியல் முடிந்த நிலையில் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு ஆலியா மானசா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் அவர் சீரியலில் நடிக்காமல் இருந்து வந்தார் பிறகு சஞ்சீவ் மட்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்த வருகிறார். தற்பொழுது கயல் சீரியல் டாப் ட்ரெண்டிங் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் ஆலியா மானசா சிறிது பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் ராஜா ராணி சீரியலின் இரண்டாவது பகுதியில் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் கர்ப்பமாக ஆனதால் இந்த சீரியலில் இருந்து விலகினார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் சன் டிவி சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவர் நடிக்க இருக்கும் புதிய சீரியலில் கல்லூரி பெண்ணாக நடிக்க இருக்கிறாராம் இதனை தொடர்ந்து இவருக்கு ஜோடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து திடீரென்று முடிந்த சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகர் தான் தற்போது சன் டிவி சீரியலில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் ஆலியா மானசாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.