இடியாப்ப சிக்கலாக போன வாழ்க்கை.. மனைவியை விட்டு பாடகி பக்கம் சென்ற நடிகர்

தற்போது அந்த நடிகரின் விவாகரத்து பிரச்சனை தான் பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. சமீபத்தில் நடந்த பட விழாவில் கூட நடிகர் இது குறித்து கோபமாக தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருந்தார். ஆனால் அதில் மறைமுகமாக அவருடைய மனைவிதான் காரணம் என வெளிப்படுத்தி இருந்தார்.

விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதற்கு பின் நடிகர் பற்றிய எந்த தகவலும் இல்லை. உடனே மனைவி எனக்கு இது பற்றி தெரியாது என கொளுத்தி போட்ட திரி வேறு விதமாக வெடித்தது. உடனே அத்தனை பழியும் நடிகர் மீது விழுந்தது.

அதேபோல் பாடகியுடன் அவருக்கு தொடர்பு என சில ஆதாரங்களும் வெளியானது. உண்மையில் இதை எல்லாம் அம்பலப்படுத்தியது அவருடைய மனைவி தானாம். ஏனென்றால் விவாகரத்து விஷயத்தில் அவர் மீதுதான் தவறு என பேசப்பட்டது.

அதனாலேயே அவர் இப்படி ஒரு வேலையை பார்த்துள்ளார். ஆனால் நடிகரோ அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் பேசியிருந்தார். ஆனாலும் இந்த விவகாரத்தை சினிமா பிரபலங்கள் தோண்டி துருவி வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

இதில் நடிகர் மீது தவறு இருப்பது மட்டுமல்லாமல் அந்த பாடகி மேல் கூட சில சர்ச்சைகள் வெடித்துள்ளது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிக்க போகிறோம் என நடிகர் இப்போது ஆலோசனை நடத்தி வருகிறாராம்.