அந்த நடிகர் திடீரென ஏன் இப்படி மாறிவிட்டார் என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் பரப்பரப்பான பேச்சாக இருக்கிறது. ஏற்கனவே அவருடைய விவாகரத்து செய்தி பூதாகரமாக வெடித்தது.
அவருடைய முன்னாள் மனைவியும் சோசியல் மீடியாவில் நடிகரின் இமேஜை டேமேஜ் செய்தார். அதற்கும் நடிகர் பதிலடி கொடுத்து சோசியல் மீடியாவே பற்றிக்கொண்டு எரிந்தது.
அந்த வாய்க்கா தகராறு ஒரு வழியாக முடிந்து விட்டது. ஆனால் நடிகர் அடுத்தடுத்து தன் பெண் தோழியை முன்னிறுத்தி பல விஷயங்கள் செய்து வருகிறார். இது அவருடைய அம்மா அப்பாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம்.
அதிலும் அப்பா மகன் மீது கடும் கோபமாக இருக்கிறாராம். சமீபத்தில் அவருக்கு உடல்நலம் சரியில்லாத சமயத்தில் கூட ஹீரோ காதலியுடன் வெளிநாட்டில் இருந்திருக்கிறார்.
அப்போது கூட நடிகரின் அப்பா அந்தப் பெண்ணோடு சேர்ந்து வந்து என்னை பார்க்க கூடாது என்று கடுமையாக சொல்லி இருக்கிறார். அதேபோல் குடும்ப விழாவிற்கு கூட அந்த பெண்ணை அழைத்து வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்களாம்.
இதனால் நடிகர் தன் நெருங்கிய உறவின் வீட்டு விசேஷத்திற்கு கூட வரவில்லை என்கின்றனர். அப்படி என்ன குடும்பத்தை விட காதலி முக்கியமாக போயிட்டார் என நடிகரைப் பற்றி இப்போது ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.