அண்ணனுக்கு அட்வைஸ் கொடுத்த தம்பி.. முடிவுக்கு வந்த குடும்ப பஞ்சாயத்து

இப்போதெல்லாம் சினிமா பிரபலங்கள் விவாகரத்து என்பதை இன்னைக்கு என்ன கிழமை என்பது போல் கடந்து போக தொடங்கி விட்டனர். சின்ன பிரச்சனை என்றாலும் உடனே கோர்ட் படி ஏறி விடுகின்றனர் சில ஜோடிகள்.

அப்படி கடந்த சில வருடங்களாக பல விவாகரத்து செய்திகள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் சமீபத்தில் இயக்குனர் ஒருவர் விவாகரத்து செய்யப் போகிறார் என வந்த தகவல் மீடியாவில் வைரல் செய்தியானது.

அதற்கேற்றார் போல் இயக்குனரின் மனைவியும் சோசியல் மீடியா பக்கத்தில் இருந்த போட்டோக்களை எல்லாம் நீக்கினார். இதையெல்லாம் பார்த்துவிட்டு இவர்கள் பிரியப் போவது உறுதி தான் என்ற முடிவுக்கு எல்லோரும் வந்து விட்டனர்.

ஆனால் இப்போது அது இல்லை என தெரிய வந்திருக்கிறது. அதாவது இயக்குனரும் அவருடைய மனைவியும் பிரிந்தே ஆக வேண்டும் என்ற முடிவில் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் இயக்குனரின் தம்பியான அந்த நடிகர் இருவரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

ஆரம்பத்தில் அவருடைய பேச்சை காது கொடுத்து கேட்காதவர்கள் பிறகு அவர் சொன்ன விஷயங்களை புரிந்து கொண்டார்களாம். அதனால் இப்போது தங்கள் முடிவிலிருந்து இருவரும் பின்வாங்கி இருக்கின்றனர்.

ஏற்கனவே இரண்டாவது மகன் மனைவியை பிரிந்தது அப்பா இயக்குனருக்கு மன உளைச்சலாக இருந்தது. இதில் மூத்த மகனும் இப்படி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த மன வருத்தத்தில் இருந்த அப்பா இப்போது மூத்த மகனின் முடிவால் நிம்மதியில் இருக்கிறாராம்.