தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் கே எஸ் ரவிக்குமார் அவர் இயக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அதுமட்டுமில்லாமல் குடும்ப பங்கான திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர். கே எஸ் ரவிக்குமார் திரைப்படத்தில் காதல், குடும்ப செண்டிமெண்ட், கலாட்டா என அனைத்தும் இருக்கும் அதனால் இவரின் திரைப்படம் வெற்றி பெற்று வந்தது.
இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றுதான் பஞ்சதந்திரம் இந்த திரைப்படத்திலும் காதல், குடும்ப செண்டிமெண்ட், கலாட்டா என அனைத்தும் இருந்தது இந்த திரைப்படத்தில் கிரேசி மோகன் வசனங்கள் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை அவரின் வசனங்கள் மிகவும் பிரபலம் ஆனால் அவர் திடீரென உடல் நலம் குறைந்து நம்முடன் இல்லை என்பது தான் மக்களுக்கு வருத்தம்.
இந்த நிலையில் பஞ்சதந்திரம் படத்தில் சஞ்சீவ் ரெட்டி என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் கைகாலா சந்தியா நாராயணா இவர் இதுவரை 750 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு தெலுங்கு பட நடிகர் ஆனால் தற்பொழுது இவர் திடீரென உடல் நலக்குறைவால் காலமானார் இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்திய நாராயணா 1935 ஆம் ஆண்டு கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கௌதாரம் கிராமத்தில் பிறந்தவர் குடிவாடா கல்லூரியில் தன படிப்பை ஆரம்பித்தார் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் பல நாடக நிகழ்ச்சிகளிலும் இவரின் நடிப்பு திறமையை பார்த்த பிரபல தயாரிப்பாளர் டி எல் நாராயணா அவருக்கு செப்பை புதூர் என்ற திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து புராண நாட்டுபுற கமர்சியல் என அனைத்து வகையான திரைப்படங்களிலும் கீழ வாகவும் வில்லனாகவும் நடித்து வந்தார். அந்த வகையில் என் டி ஆர் கிருஷ்ணா ஷோபன்பாபு சிரஞ்சீவி பாலகிருஷ்ணா நாகார்ஜுனா வெங்கடேஷ் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவர் நீ மறைவிற்கு பல சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
