IPL – லில் விளையாண்டு அதிகமாக சம்பாதித்த 5 நட்சத்திர வீரர்கள்- கிங் கோலிக்கு மூன்றாவது இடம்.?

வருகின்ற ஐபிஎல் 15 வது சீசன் நாளை கோலாகலமாக இந்தியாவில் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு சில முக்கிய நகரங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது இந்த குறிப்பிடதக்கதாகும். அதிலும் குறிப்பாக மும்பை, புனே ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன இந்த வருடம் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 10 அணிகள் இந்த சீசனில் களமிறங்குகின்றன.

அந்த இரண்டு அணிகள் லக்னம் மற்றும் குஜராத் அணிகள் தான் இந்த இரு அணிகளும் தற்பொழுது சிறந்த வீரர்களை வாங்கி உள்ளது சிறப்பான பயிற்சியை மேற்கொண்டு களத்தில் இறங்குவதால் பழைய 8 அணிகள் சிம்ம சொப்பனமாக இந்த இரண்டு அணிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL ல் நடத்துவதன் மூலமும் பல கோடிகளை பிசிசிஐ அள்ளி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதேபோல IPL லில் விளையாடுவதன் மூலம் கிரிக்கெட் வீரர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு அணிக்கும் கேப்டனாக இருக்கும் வீரருக்கு அதிக சம்பளம் கொடுத்து அசத்துகிறார் அந்த அந்த அணி நிர்வாகம் அப்படி பல ஆண்டுகளாக ஒரே அணியில் தக்க வைக்கப் பட்டுள்ள வீரர் அதிக சம்பளத்தை வாங்கி அசத்துகின்றனர் அவர்களைப் பற்றி தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

1.எம்எஸ் தோனி :

2008 லிருந்து 2021 வரை சென்னை அணியின் கேப்டனாக இருந்து அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார் IPL – லில் அதிகபட்சமாக சுமார் 15 கோடி எல்லாம் ஒரு சீசனுக்கு வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்சமாக 12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம் அப்படி பார்க்கையில் இந்த IPL தொடரின் மூலம் சுமார் எம்எஸ் தோனி 164 கோடி வரை சம்பாதித்து உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன இவரே அதிகம் சம்பாதித்த ஐபிஎல் வீரர்கள் நம்பர் ஒன்னாக இருக்கிறார்.

2. ரோகித் சர்மா :

இவரை தொடர்ந்து அதிகம் சம்பாதித்தவர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாகவும் திகழ்கிறார் இந்த வருடத்திற்கு மட்டும் அவர் 16 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை IPL லின் மூலம் ரோகித் சர்மா சம்பாதித்து உள்ள தொகை சுமார் 162 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி :

மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது விராட் கோலி 2008ல் இருந்து இப்போது வரை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் அந்த அணிக்கு கேப்டனாகவும் நட்சத்திர ஆட்டக்காரராக விளையாடி வந்தவர் தற்போது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினாலும் இந்த வருடம் அவர் 15 கோடி சம்பளம் கொடுத்து அழகு பார்த்தது. இப்படி ஐபிஎல்- லில் அதிகம் காசுகளை வாங்கியவர்களில் இவரும் ஒருவர். கடந்த நான்கு வருடங்களாக 17 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார் இவர் இதுவரை 158 கோடி வரை சம்பாரித்து உள்ளார்.

4. சுரேஷ் ரெய்னா :

சென்னை அணியில் சின்ன தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்காக விளையாடி வந்தவர் இவர் 2008 இலிருந்து 2021 வரை விளையாடியவர் இவர் இதுவரை IPL – ல் மூலம் சுமார் 110 கோடி வரை சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது.

5. ஏபி டிவிலியர்ஸ் :

ஐந்தாவது இடத்தை பிடித்த வீரர் ஏபி டிவிலியர்ஸ் இவர் 360 பக்கமும் சுழண்டு அடிக்கக் கூடிய வல்லமை படைத்தவர் 2008 வீட்டிலிருந்து இப்போது வரை பல்வேறு அணிக்காக விளையாடியவர் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார் இவர் ஐபிஎல்லின் மூலம் சுமார் 100 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.

Leave a Comment