500 படங்களில் நடித்து மிரட்டிய தவக்களை.! ஒரே ஒரு படத்தை தயாரித்து மொத்த சொத்தையும் இழந்த அவல நிலை.!

Thavakalai : பாக்கியராஜ் நடித்து தயாரித்த திரைப்படம் தான் முந்தானை முடிச்சு இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தவக்களை இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பழமொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் ஒரே ஒரு திரைப்படத்தை தயாரிக்க ஆசைப்பட்டு மொத்த சொத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்.

தவக்களை பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தில் ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா என்ற பாடலில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருப்பார் அதனைத் தொடர்ந்து நடிகர் குண்டுமணி தவக்களையை அழைத்துக் கொண்டு பாக்கியராஜ் இடம் அறிமுகம் செய்து வைத்தார் அப்பொழுது பாக்கியராஜ் சில காட்சிகளை நடித்து காட்டக் கூறினார் அவரின் நடிப்பு பாக்கியராஜ் அவர்களுக்கு பிடித்ததால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கொடுத்தார்.

அந்த வகையில் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நான்கைந்து சிறுவர்கள் நடிக்கும் கேரக்டர் இருந்தது அதில் ஒருவராக தவக்களை நடிக்க வைத்தார். அந்த படத்தில் தவக்களை நடிப்பு மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது முந்தானை முடிச்சு திரைப்படம் வெற்றி பெற்றதால் இவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது ஓசை, நீங்கள் கேட்டவை, காக்கிச்சட்டை, ஆண்பாவம், என் ரத்தத்தின் ரத்தமே, பாட்டு வாத்தியார் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் நடித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் தெலுங்கில் குறிப்பாக மோகன்பாபு ஹீரோவாக நடித்த திரைப்படத்தில் வில்லனாகவும் தவக்களை நடித்திருப்பார் அதேபோல் இயக்குனர் வினயன் அற்புதத் தீவு என்ற திரைப்படத்தை இயக்கினர் அந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க உயரம் குறைவானவர்கள் நடித்திருப்பார்கள் அதில் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் தவக்களை.

இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த தவக்களைக்கு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது அதனைத் தொடர்ந்து சொந்தமாக ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என முடிவு செய்து தன்னுடைய நண்பர்களிடம் அதனைக் கூறி அவர்களையும் இணைத்துக் கொண்டு ஒரு படத்தை தயாரித்தார் ஆனால் படத்தை தயாரித்து முடிப்பதற்குள் அவர்களுடைய நண்பர்கள் கழண்டு கொண்டார்கள் அதனால் இவர் மீது மொத்த சுமையும் இறங்கியது.

வேறு வழியில்லாமல் அங்கேயும் எங்கேயும் கடனை வாங்கி படத்தை தயாரித்தும் முடித்தார் படத்தையும் ரிலீஸ் செய்தார் படம் வெளியாகி படும் தோல்வியை அடைந்தது அதனால் பெரும் கடனில் தவித்தார் இந்த நிலையில் தான் ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டையும் விற்று கடனை அடைத்தார் வீட்டை விற்றதால் வாடகை வீட்டில் குடியேறினார் அதன் பிறகு பட வாய்ப்பு கிடைக்காததால் சினிமினி என்ற கலைக்குழுவை நடத்தி ஓரளவு வருமானத்தை பார்த்து வந்தார்.

ஆனாலும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை ஆனால் கடைசி வரை அவருக்கு யாருமே வாய்ப்பு கொடுக்கவில்லை 2017 ஆம் ஆண்டு அவர் காலமானார் ரசிகர்களை தன்னுடைய நகைச்சுவையால் சிரிக்க வைத்த தவக்களை கடைசி காலத்தில் இவ்வளவு கஷ்டங்களை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.