Aishwarya Rajesh : தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகவும், ஹீரோயின்னாகவும் நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் பின் ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஹீரோயின்னாக நடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த திருடன் போலீஸ், மனிதன், தர்மதுரை, வட சென்னை, க பே ரண சிங்கம் போன்ற படங்கள் வெற்றி பெற்றது அதன் பிறகு மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் ஒரு கட்டத்தில் சோலோ படங்களிலும் நடித்தார்.
அப்படி இவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற படங்கள் வெளிவந்து சுமாராகவே ஓட்டின. தற்பொழுது வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் மோகன்தாஸ், தீயவர்கள் கொலைகள் நடுங்க போன்ற தமிழ் படங்களில் நடிக்கிறார் மேலும் மலையாளத்தில் மூன்று படம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணம் பண்ணி கொள்ளாதது பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. நான் திருமணம் பற்றி யோசித்து கூட பார்த்தது கிடையாது கல்யாணம் நடக்கும் பொழுது நடக்கட்டும் அது நடக்க வேண்டும் என்று இருந்தால் நடந்து விடும் நடக்காது என்றால் நடக்காது அது நடக்கும் பொழுது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
கல்யாணம் நடக்கலன்னாலும் எனக்கு படங்கள் தான் முக்கியம் பட வாய்ப்புகளை பெறுவதில் தான் என்னுடைய கவனம் இருக்கிறது வாய்ப்பு பெற்ற படங்களில் எந்த அளவுக்கு என்னால் திறமையாக நடிக்க முடியும் எந்த அளவிற்கு என்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்த முடியும் என்று தான் பார்க்கிறேன் தவிர மற்றபடி தனிப்பட்ட விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தியது கிடையாது.
திருமணம் குறித்த எந்த ஒரு யோசனையையும் தற்பொழுது இல்லை சினிமா தான் எனக்கு உயிர் எனவே என்னை மட்டுமில்லாமல் என்னுடைய உயிரான சினிமாவையும் சேர்த்து நேசிக்க கூடிய என்னுடைய தன்மையை அறிந்தா ஒரு நபரை சந்திக்கும் வரை என்னுடைய திருமணம் பற்றிய யோசனை கூட எனக்கு கிடையாது என கூறி இருக்கிறார்.