அஜித்தின் பில்லா படத்தை பார்த்துவிட்டு ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை பல வருடம் கழித்து வெளிவரும் உண்மை.! தயாரிப்பாளர் கூறிய தகவல்.

சினிமா காலத்திற்கு ஏற்றவாறு புது புது திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும்  பழைய திரைப்படங்கள் இன்றளவும் மக்களுக்கு பிடித்துப்போய் தான் இருக்கின்றன.

அப்படி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1980 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் மீண்டும் தமிழிலேயே ரீமேக் செய்யப்பட்டு அஜித் நடித்திருந்தார்.

ரஜினியின் பில்லா ரீமேக் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார் அஜித்தை வைத்து 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இன்டர்நேஷனல் அளவில் மாபெரும் ஹிட்டடித்த வசூலை வாரி குவித்தது.

இந்த படத்திற்கு அஜித்தின் நடிப்பு பெரும் பலமாக மாற்றினாலும் இசையிலும் யுவன்சங்கர்ராஜா தன் பங்கிற்கு  படத்திற்கு பலம் சேர்த்தார்.

அஜித்தின் பில்லா திரைப்படம் வெளிவந்து பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது HD  தரத்தில் தியேட்டரில் ரீ- ரிலீசாக உள்ளது .

காரணம் அஜித் படம் நடித்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் படம் வெளிவராமல் இருப்பதால் ரசிகர்களை சந்தோஷம் அடையச் செய்ய பில்லா திரைப்படம் தற்போது வெளியிட உள்ளது.

இந்த நேரத்தில் பில்லா படத்தை தயாரித்த ஆனந்தா எல். சுரேஷ் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினி அஜித்தின் பில்லா படத்தை பார்த்துவிட்டு சில கமெண்டுகளை தெரிவித்தாக அதனை தற்போது போட்டு உடைத்துள்ளார்.

ரஜினி கூறியது என்னவென்றால்  அஜித்தின் “பில்லா” படத்தை பார்த்துவிட்டு நான் பில்லா படத்தில் நடித்ததை விட நீங்க ரொம்ப ஸ்டைலா பண்ணி இருக்க இப்படி ஒரு மிரட்டலான ரீமேக் படமாக இருக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

எனக்கு பிறகு பில்லா படத்தில் அஜீத் நடித்து இருந்தார் இந்த படத்தில் அவர் நடித்தால் மட்டுமே படம் ஸ்டைலாகவும் அதேசமயம் சிறப்பாகவும் வந்திருக்கிறது என தெரிவித்தார் இந்த படம் நிச்சயம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடையும் என கூறினாராம் அவர் சொன்னது போலவே படம் வெளியாகி வேற லெவல் ஹிட்டடித்தது மேலும் நடிகர் அஜித்திற்கு இது ஒரு திருப்புமுனை படமாகவும் அமைந்தது.

Leave a Comment