தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ எடுக்கவுள்ளார் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் விஜய்க்கு அண்ணனாக சரத்குமாரும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது பூஜையின் போது கூட விஜயுடன் சேர்ந்து இவர்கள் இருவரும் வந்து இருந்தனர் அதைகூட நாம் பார்க்க முடிந்தது.
தளபதி 66 படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது படக்குழு ராமோஜி பிலிம் சிட்டியில் படத்தை எடுக்க முனைப்பு காட்டியது ஆனால் விஜய் அங்கு வைத்து படத்தை எடுத்தால் தெலுங்கு தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் ஆனால் தமிழ் தொழிலாளர்களின் நிலைமை அதோ கதியேன யோசித்து தயாரிப்பாளரிடம் சென்னையில் படத்தின் ஷூட்டிங்கை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.
இதன் மூலம் தமிழ் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதே முக்கிய காரணம் அதற்கு ஏற்றார்போல விஜய் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே தில் ராஜு சென்னையிலேயே செட் அமைக்கப்பட்டு தற்போது படத்தின் சூட்டிங் எடுக்கப்பட இருக்கிறாராம். அஜித்திற்கு ஏன் அந்த மனசு வரவில்லை என பலரும் கேள்விகளைக் கேட்கத் தொடங்கி உள்ளனர் காரணம் அஜித்தின் வலிமை, விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய 3 படங்களுமே ராமோஜி பிலிம் சிட்டியில் தான் எடுக்கப்பட்டது.
இதனால் அங்கு இருப்பவர்களுக்கு வேலை கிடைத்தது தமிழ்த் தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பதை உணரவில்லை என பலரும் கூறுகின்றனர் உண்மையான காரணம் அஜித்துக்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது இங்கு ஷூட்டிங் எடுத்தால் ரசிகர்கள் கூட்டம் அதிகம் வரும் அதுமட்டுமில்லாமல் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என கருதிய அவர் ராமோஜி பிலிம் சிட்டியில் அஜித்தின் 3 படமும் எடுத்து அங்கேயே முடித்தார் என கூறப்படுகிறது.