சினிமாவில் பார்ப்பது போல நிஜத்திலும் நடிகர்கள் அனைவரும் ஒரே மாதிரியான குணம் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர் ஆனால் ஒரு சிலர் மட்டுமே படத்திலும் சரி, நிழ வாழ்க்கையிலும் சரி எந்த ஒரு வேஷமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருப்பார்கள் அதற்கு எடுத்துக்காட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் அதிகம் பேச மாட்டார்..
ஆனால் எப்பொழுதுமே சிம்பிள் ஆக இருக்கக்கூடிய ஒரு மனிதர் இவரைப் பற்றிதான் தற்பொழுது ஒரு தரமான சம்பவத்தை நாம் பார்க்க இருக்கிறோம்.. 1980 ஆம் ஆண்டு உன் கைராசி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜவஹர் இவர் ரஜினியின் அண்ணாமலை, முத்து போன்ற படங்களில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி உள்ளார் இவர் ரஜினி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
அதில் அவர் சொன்னது எல்லாம் உன் கைராசி படத்தில் ரஜினிக்கு மூன்று லட்சம் சம்பளம், முத்து படத்தில் ஒன்றை கோடி ரூபாய் சம்பளம். சம்பளம்புகழும் உயர்ந்தாலும், அவரது குணாதிசயம் மட்டும் அப்படியே தான் இருந்தது. எல்லாம் உன் கைராசி படத்திற்காக ஸ்பெஷல் டிரஸ் தயாரித்தோம் காட்சி படமானது.
ஆறு மாதம் கழித்து இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை படக்குழு தொடங்கி இருக்கியது ஆனால் அந்த சமயத்தில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது இதனால் ரஜினியை அந்த ஸ்பெஷல் டிரஸ் உடன் வருமாறு அழைத்தோம். சண்டை என்பதால் டூப் நடிகருக்கும் அதே டிரஸ் போட வேண்டிய சூழ்நிலை ஆனால் டூப் நடிகருக்கு டிரஸ் தைக்க முடியவில்லை நடிகர் ரஜினியும் வந்து விட்டார் இந்த பிரச்சனையை அவரிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை..
ஒருவழியாக பிரச்சனையை அவரிடமும் சொல்லிவிட்டேன் முடிந்தவரை முயற்சி பண்ணுங்க இல்லைனா பார்த்துக்கலாம் என்றால் ஒருவேளை முதல் காட்சியையும் ரீ – சூட் பண்ண சொல்லிருவாரோ என சந்தேகப்பட்டு டைரக்டர் இடம் சொன்னேன்.. டைரக்டர் எம்.ஏ. திருமுகம் யோசித்தார் என்னதான் முடிவு ரஜினிகாந்த் ட்ரெஸ்ஸை போட்டு ஷாட்டுகளை எல்லாம் எடுத்து விடுவோம் பின்னர் டூப் – க்கு அதே டிரஸ் போட்டு எடுப்போம் என்ற டைரக்டர் முதலில் ரஜினியை சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்தோர்.
டூப் நடிகர் தூரத்தில் நின்று கொண்டிருந்தார் டைரக்டரை பார்த்து ரஜினி ஏன் இந்த டூப் நடிகரின் ஷாட்டுகளை எடுக்கவில்லை என்று கேட்டார் விஷயத்தை கூற அதற்கு ரஜினி நோ நோ டூப் நடிகரின் ஷாட்டையும் கூடவே எடுத்துருங்க அதுதான் நல்லது என்று தன் டிரெஸ்ஸை கழட்டி டூப் நடிகருக்கு மாட்டி விட்டார். இருவரும் காட்சியின் போது மாறி மாறி அந்த சட்டையை போட்டு நடித்தார்கள்.
படத்தின் காட்சியை நன்றாக வந்தால் போதும் என கருதி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரஜினி தனது வேலையை செய்தார் இதனை பார்த்த படக்குழு ஆச்சரியமாக போனது ஒரு பெரிய நடிகர் இதற்காக கோபப்படாமல் முகம் சுளிக்காமல் நடித்தது அப்பொழுது பலருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது.
மேலும் கம்பெனியில் எல்லோருக்கும் என்ன சாப்பாடு கொடுக்கிறதோ அதே சாப்பாடு தான் ரஜினியும் சாப்பிடுவார் ஸ்பெஷலாக எதுவும் கேட்க மாட்டார் அதே போல் காட்சி வந்தால் அசிஸ்டன்ட் டைரக்டரை அழைத்து வசனம் பற்றி தான் கேட்பார் அதே போல படப்பிடிப்பில் தனது ஐடியாக்களை அவர் கூறுவார் டைரக்டர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அதை அப்படியே வாபஸ் வாங்கி விடுவாராம் எந்த கருத்தையும் டைரக்டருக்கு திணிக்க மாட்டார் எனவும் கூறினார்.