யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான கே ஜி எஃப் படம் ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டது ஒருவழியாக கடந்த ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீஸ் ஆனது.
படத்தில் ஆக்ஷன் சென்டிமென்ட் மாஸ் சீன்கள் என அனைத்தும் இருந்ததால் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக கன்னடத்தையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் நாளுக்கு நாள் கேஜிஎப் 2 படத்தின் வசூல் அதிகரித்து உள்ளது சொல்லப்போனால் தற்போது வரை ஆயிரம் கோடியை தாண்டி உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் யாஷ்க்கு சினிமா வாய்ப்புகளும் விளம்பர பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன அந்த வகையில் பான் மசாலா விளம்பரம் ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறி உள்ளார்.
கடைசிவரை பேசி மிகப்பெரிய ஒரு தொகையை கொடுக்க முனைப்பு காட்டியது விளம்பரம் ஆனால் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது என கூறிவிட்டாராம் சொல்லப்போனால் இந்த விளம்பரத்திற்காக மிகப் பிரம்மாண்டமான டபுள் நம்பரில் பணம் கொடுக்க விளம்பர நிறுவனம் ரெடியாக இருந்தது. அதை மறுத்து விட்டாராம் KGF யாஷ்.
சினிமா உலகில் மிகப்பெரிய சூப்பர் ஹீரோவாக வளர்ந்திருக்கும் யாஷ். இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்ல விஷயம் என கூறி சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.