6 முறை நிலநடுக்கம் வந்தும் கெத்தாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில்.! மார் தட்டி கூறிய விக்ரம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம். இவர் பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் நிகழ்ச்சியாக நேற்று மும்பை சென்றுள்ளார் அங்கு பிரஸ் மீட்டில் பேசிய விக்ரம் தஞ்சை பெரிய கோவிலின் பெருமைகளை பேசி அரங்கத்தை அதிரவிட்டார்.

அதாவது நேற்று நடந்த பிரஸ் மீட்டில் நடிகர் விக்ரம் ஆறு பூகம்பம் வந்தும் அசராமல் நிற்கிறது தஞ்சை பெரிய கோவில் அதுமட்டுமல்லாமல் ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட மேம்பாட்டு பணிகளையும் பற்றி விக்ரம் அவர்கள் அழகாக கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது முந்தைய காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் பற்றியும் பண்டைய கால வரலாற்று பற்றியும் தெரிந்து கொள்ள நாம் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் நாம் எகிப்தில் உள்ள பிரமிடுகள் எப்படி கட்டினார்கள் என்று எல்லோரும் யோசிக்கிறோம் ஆனால் நம் இந்தியாவில் நிறைய கோவில்கள் இருக்கின்றது அதில் உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான்.

80 டன் எடையுடைய கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் எந்த ஒரு எந்திரமும் இல்லாமல் வெறும் மனிதர்களும், யானைகள், குதிரைகள் என இவைகளை மட்டும் வைத்து அந்த கோபுரத்தை அமைத்தது தான் விஞ்ஞானிகளை இன்று வரைக்கும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

ஒழுங்காக நிற்காத பைசா கோபுரத்தை நாம் பார்த்து வியப்படைகிறோம் அதுமட்டுமல்லாமல் அது அருகில் நின்று செல்பி கூட எடுத்துக் கொள்கிறோம் ஆனால் ஒரு இன்ச் கூட சாயாமல் திடமாக நிற்கக்கூடிய பழங்கால கோவில்கள் நம் நாட்டில் ஏராளமானது உள்ளது. பிலாஸ்டர்கள் பயன்படுத்தாமல் கட்டப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோவில் ஆறு பூகம்பங்களை தாங்கியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா.? அது எப்படி சாத்தியமானது என்று பலரும் வியந்து பார்க்கிறார்கள்.

இந்த கோவில் சுற்றுச்சூழல் பின்னர் ஆறடி நிலத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன் பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டி உள்ளனர் அதனால்தான் தஞ்சை பெரிய கோவில் ஆறு பூகம்பத்தை தாண்டியும் இன்று அளவு நிலைத்து நிற்கிறது. அதுமட்டுமின்றி இராஜராஜ சோழன் அவரது ஆட்சி காலத்தில் 5000 அணைகளை கட்டி  உள்ளார். அந்த காலத்திலேயே ராஜ ராஜ சோழன் நீர் மேலாண்மை ஆணையத்தையும் அவர் வைத்து நடத்தினார்.

மேலும் இவையெல்லாம் ஒன்பதாம் நூற்றாண்டில் நடந்தவை இதற்கு 5000 ஆண்டுகள் கழித்து தான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடித்தார் இதன் மூலம் நாம் எந்த அளவிற்கு பெருமைமிக்க கலாச்சாரத்தை கொண்டு இருக்கிறோம் என்பதை யோசித்து பார்க்கவே வியப்பாக உள்ளது என்று விக்ரம் பேசி உள்ளார். அவர் பேசுகையில் அமைதியாக இருந்த அரங்கம் விக்ரம் பேசி முடித்த உடன் அரங்கமே அதிரும் அளவிற்கு கை தட்டி கூச்சலிட்டனர்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment