தனி ஒருவன் திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு பதிலாக முதலில் ஒப்பந்தமாகி இருந்த நடிகர் யார் தெரியுமா.?

பொதுவாக ஒரு மொழியில் வெளியான திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டால் அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம். அந்த வகையில் சினிமாவில் ரீமேக் செய்யும் படங்களை இயக்குபவர் என்ற பெயரை பெற்றவர்தான் இயக்குனர் மோகன் ராஜா.

இது ஒரு நல்ல கலை தான் இருந்தாலும் ரீமேக் இயக்குனர் என்ற பெயரை மோகன்ராஜா விரும்பவில்லை. இதன் காரணமாக இவரின் சொந்த உழைப்பால் உருவான திரைப்படம் தான் தனி ஒருவன். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அதோடு பல பிரபலங்கள் ரசிகர்கள் என்று அனைவரும் மோகன் ராஜாவை பாராட்டிய இருந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஜெயம் ரவி, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலரின் கேரக்டர்களும் பாராட்டப்பட்டது. அதேபோல் தனது சிறந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தவர் தான் நடிகர் அரவிந்த்சாமி.

தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் முதலில் அரவிந்த்சாமி நடித்திருந்த வேடத்தில் நடிகர் மாதவன் ஒப்பந்தமாகியிருந்தார்.  ஆனால் நடிகர் மாதவனுக்கு அப்பொழுது பல திரைப்படங்களில் நடித்து கொண்டு  இருந்ததால் நடிக்க முடியாமல் போய் விட்டதாக கூறியுள்ளார்.

Leave a Comment