தனி ஒருவன் 2 திரைப்படத்தின் கதாநாயகி இவர்தான்.! இதோ மோகன் ராஜாவே அறிவித்துவிட்டார்.!

0
ravi
ravi

இயக்குனர் மோகன் ராஜா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கிய தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்கள் இதன் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார் மோகன் ராஜா, மேலும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சுயசக்தி விருதுகள் மூன்றாம் ஆண்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழா தமிழகத்தில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் ஒரு அங்கீகார விழாவாக நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ராஜா பேசுகையில், சினிமாவில் பெரும் அனுபவம் நிறைந்த நடிகையாகவே நயன்தாரா உள்ளதாகவும், விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார் என்று நினைப்பதாகவும் கூறினார். மேலும் ‘தனி ஒருவன்’ இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறினார்.