அர்ஜுனை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன கோதை.! அம்மாவிற்காக சாமியிடம் வேண்டிக்கொண்ட தமிழ்.! தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வீடியோ.!

thamizhum-saraswathiyum-may-21
thamizhum-saraswathiyum-may-21

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் கடந்த எபிசோட்டில் அர்ஜுன் தமிழுக்கு எதிராக சில சதி வேலைகளை செய்ததால் கடைசியில் அர்ஜுன் மாட்டிக் கொண்டார் அதனால் கோதை இடம் அசிங்கப்பட்டு நின்றார்.

தமிழை கோதை தவறாக புரிந்து கொண்டு இத்தனை நாள் வரை வெறுத்துக் கொண்டு வந்தார் ஆனால் கடைசியில் கோதை கம்பெனியில் இரண்டு மிஷின்கள் வீணானதால் மேலும் ஆர்டர் கேன்சல் ஆகிவிடும் என பயந்து கொண்டிருந்த பொழுது தமிழ்  வந்து உதவி செய்து அனைவரின் மனதை வென்றுவிட்டார்.

ஆனால் அர்ஜுன் இதை அப்படியே விட்டால் சரி வராது என இன்னும் சதித்திட்டங்களை தீட்ட ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் திடீரென ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் கோதை கார்த்திதான் பக்குவம் இல்லாமல் இருக்கான்னு பார்த்தா படிச்ச நீங்களும் இப்படி இருக்கீங்களே.

என வாய்க்கு வந்தபடி அர்ஜுனை பார்த்து கோதை கேள்வி கேட்கிறார் உடனே ராகினி இந்த வீட்டோட மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் இவ்வளவு அசிங்கப்படுத்துறீங்க நாங்க இப்பவே வீட்டை விட்டு போறோம் என கூற கோதை போறதா இருந்தா போய் தொல எனக் கத்துகிறார் அது மட்டும் இல்லாமல் எல்லாரும் போங்க என கத்தும் பொழுது கோதை நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்து விடுகிறார்.

கோதைக்கு என்ன ஆனது என பலரும் குழப்பத்தில் இருக்கும் நேரத்தில் ராகினி தமிழிடம் சென்று எங்க அம்மாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு காரணம் நீ தான் என தமிழையும் சரஸ்வதியும் மிரட்டி விட்டு வருகிறார் அதன் பிறகு தமிழ் கோவிலுக்கு வருகிறார்.

கோவிலுக்கு வந்து என்னதான் அவங்களுக்கும் எனக்கும் சண்டையாக இருந்தாலும் அவங்க என்ன வளத்தவங்க கொஞ்ச நாள் பாசத்தையும் காட்டுனாங்க என்னை பெத்தவங்க அதனால அவுங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என சாமி இடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். தமிழ் அந்த சமயத்தில் கோதையின் கணவர் தமிழ் வேண்டிக் கொண்டிருப்பதை பார்க்கிறார் அதனால் சந்தோஷப்படுகிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ வீடியோ முடிகிறது.