Thamizhum saraswathiyum october 8 promo video : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் தமிழ் கம்பெனியில் அர்ஜுன் கம்பெனியிலிருந்து பல தொழிலாளிகள் வேலைக்கு சேர்ந்ததால் அர்ஜுனுக்கு பிடிக்கவில்லை அதனால் எப்படியாவது அந்த கம்பெனியை நடத்த விடாமல் பண்ண வேண்டும் என முடிவு செய்து அந்த தொழிலாளிகளுடன் இரண்டு நபர்களை உள்ளே அனுப்புகிறார்.
அது மட்டும் இல்லாமல் அந்த இரண்டு நபர்களை வைத்து தமிழ் கம்பெனியை மொத்தமாக நாசம் செய்ய திட்டம் தீட்டுகிறார் அப்பொழுது அந்த இரண்டு நபர்களும் தமிழ் கம்பெனியை ஷார்ட் சர்க்யூட் செய்து எறிகிறார்கள்.

தமிழ் கம்பெனி கொழுந்து விட்டு எரிகிறது அந்த சமயத்தில் அர்ஜுன் ஆறுதல் சொல்லுவது போல் நக்கலாக தமிழிடம் பேசிக் கொண்டிருக்கிறார் இதனால் பொறுமை இழந்த கோதை அர்ஜுன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விடுகிறார்.
அதுமட்டுமில்லாமல் அர்ஜுனிடம் தமிழ் ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி நீ எவ்வளவு எரிச்சாலும் மீண்டும் எழுந்து வருவான் சாதிப்பான் என அர்ஜுனிடம் சவால் விடுகிறார் கோதை இதனால் தமிழ் மெய்சிலிர்த்து நிற்கிறார்.

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய அம்மாவை நீண்ட காலம் கழித்து முதன்முறையாக அம்மா என அழைக்கிறார், இதனால் கோதை மனது குளிர்கிறது தமிழை கட்டிப்பிடித்து கண்ணீரில் மிதக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.

