அர்ஜுன் கார்த்தி செய்த சதி வேலையால் பறிபோன சொத்து.! தமிழுக்கு அடித்த லக்கு.! எதிர்பார்க்காத திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும் ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் தமிழ் சரஸ்வதி மற்றும் நமச்சி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது உமாபதி உங்க ஆர்டர் கேன்சல் செய்கிறேன் எனவும் ரா மெட்டிரியலை திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லிவிட்டார் இதனை பேசிக் கொண்டிருக்கும் பொழுது வசு கால் செய்கிறார் அவரிடம் நடந்ததை சரஸ்வதி கூறிக் கொண்டிருக்கிறார் இதனால் அம்மா இடம் ஹெல்ப் கேக்கவா என கேட்க தமிழ் வேண்டாம் என கூறிவிடுகிறார் சொந்தக்காரர்களால் தான் இவ்வளவு பிரச்சனையும் எனவும் அதனால் கண்டிப்பாக வேண்டாம் என மறுத்து விடுகிறார்.

அடுத்த காட்சியில் வசுவை பார்க்க அவரின் அம்மா சந்திரகலா வருகிறார் அவரிடம் நடந்ததை கூறுகிறார் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவலாமா என கேட்க அது சரிவராது அவருக்குன்னு ஒரு ப்ராப்பர்ட்டி இருக்கணும் அப்பதான் எல்லாமே கரெக்டா நடக்கும் என கூறிக் கொண்டிருக்கிறார் இதனால் சந்திரகலா பிளான் போட்டு கோதையிடம் தன்னுடைய மகனுக்கு பெண் பார்த்து உள்ளோம் எனக்கூறி அவர்கள் எவ்வளவு பிராப்பர்ட்டி இருக்கும் என கேட்கிறார்கள் அதனால் நீங்கள் கார்த்திக் மாப்பிள்ளைக்கு எப்படி பிரித்து கொடுப்பீங்க என நாசுக்காக கேட்கிறார்.

இந்த சொத்தில் தமிழுக்கும் பங்கு இருப்பதையும் அவர் குத்தி காட்டுகிறார் இதனால் கோதை இதெல்லாம் ஏன் இப்ப பேசுறீங்க என கேட்க எப்படி இருந்தாலும் ஒரு நாள் பிரிச்சு தான் ஆகணும் அத நீங்க எப்படின்னு சொல்லிட்டீங்கன்னா நானும் ஒரு முடிவுக்கு வருவேன் என கூற அதற்கு உங்கள் விருப்பம் யார் என்ன தப்பு பண்ணினாலும் சொத்து சமமாக தான் பிரிக்கணும் என கூறி விடுகிறார் ஆனால் கார்த்தியின் சகோதரி தமிழுக்கு சொத்துக் கொடுக்கக் கூடாது என்பதில் முடிவாக இருக்கிறார்.

சொத்தை சமமாக பிரிக்க கோதை ஒப்புக்கொண்டார் இந்த நிலையில் அடுத்த காட்சியில் சரஸ்வதி இண்டஸ்ட்ரியலில் சரஸ்வதி, நமச்சி, தமிழ் மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இவ்வளவு நாள் உழைத்த எல்லாமே வேஸ்ட்டா நம்மளால எப்படி ஒர்க்கஸ்க்கு பணம் கொடுப்பது கம்பெனிக்கு வாங்கின வட்டியை எப்படி கட்டுவது லீசுக்கு எடுத்த கம்பெனிக்கு எப்படி காசு கொடுக்கிறது அதனால காசு ரொம்ப முக்கியம் என கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ரா மெட்டீரியலை திரும்பித் தர வேண்டும் என்றாலும் நமக்கு காசு வேண்டும் நம்மிடம் தான் காசே கிடையாது என நமச்சி கூறுகிறார்,

அந்த நேரத்தில் தமிழின் அப்பா சொத்து பத்திரத்தை எடுத்துக் கொண்டு வருகிறார். அப்பொழுது சரஸ்வதி வாங்க மாமா எனக் கூற நமச்சியும் வாங்கப்பா என கூறுகிறார் அவருக்கு இங்க என்ன வேலை என தமிழ் கோபமாக கேட்கிறார். அப்பொழுது நமச்சி நடந்ததை கூறுகிறார் உடனே தமிழ நம்ப கம்பெனியோட பிரச்சனை எதுக்கு அங்க சொல்றீங்க. என கேட்க அது மட்டும் இல்லாமல் தமிழ் பிரச்சினைக்கு காரணம் அவங்க தான் இதுவரைக்கும் எதையும் கண்டுக்கல எனக் கூற உடனே சரஸ்வதி நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க மாமா என கேட்கிறார்.

உடனே தமிழின் அப்பா சொத்தை மூன்று சம பங்காக பிரிச்சாச்சு அம்பத்தூர் எஸ்டேட் யூனிட்ட உங்களிடம் கொடுத்துவிட்டு போகலாம்னு வந்தேன் என கூறுகிறார் ஏதாவது பிரச்சனையா மாமா ஏன் பிரிச்சீங்க என கேட்க அதலாம் ஒன்னும் இல்ல என்னைக்கு இருந்தாலும் பிரிக்க வேண்டியது தானே அதனால பிரிச்சாச்சு நாளைக்கு தமிழ் பெயரில் ரிஜிஸ்டர் பண்ணிடலாம் என கூற இத்துடன்  இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment