கோதையை கண்ணீரில் மிதக்க வைத்த அர்ஜுன்.! கார்த்தியை அடிப்பதற்கு துணிந்த மாப்பிள்ளை.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்..

thamizhum saraswathiyum september 4
thamizhum saraswathiyum september 4

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மொத்த சொத்தையும் எழுதி வாங்கி விட்டதாக அனைவரும் முன்பும் கூறுகிறார் ஆனால் இதை யாரும் நம்பாமல் இருக்கிறார்கள் அப்பொழுது அர்ஜுன் என்னை வீட்டை விட்டு வெளியே போ என சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது எனக் கூற அதிர்ச்சி அடைகிறார்கள் உடனே அர்ஜுன் தன்னுடைய அக்காவின் கணவரிடம் ஒரு டாகுமெண்ட் கொடுத்தேனே அதை எடுத்துக் கொண்டு வாங்கள் என கூறுகிறார் அந்த டாக்குமெண்டை எடுத்து கார்த்தியிடம் தூக்கி போடுகிறார்.

கார்த்தி அந்த டாக்குமெண்டை படித்து பார்த்துவிட்டு அப்பா இந்த அத்தானை சொத்தும் ராகினி பேர்ல தான் இருக்கு என கூறுகிறார் உடனே அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நடேசன் ராஸ்கல் எங்களை ஏமாற்றி மொத்த சொத்தை எழுதி வாங்கிட்டியா என அர்ஜுன் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார் அந்த சமயத்தில் ராகினி நடேசன் கையை தட்டி விட்டு விடுங்கப்பா அவர் என்ன தப்பு பண்ணிட்டாரு அவங்க சொத்தை தானே எழுதி வாங்கி இருக்காங்க எனக் கூறுகிறார்.

இதனால் கோதை உடைந்து போய் நிற்கிறார் அதுமட்டுமில்லாமல் சரஸ்வதி ராகினி உனக்கு தெரியலையா சீட்டிங் பண்ணி மொத்த சொத்தை எழுதி வாங்கி இருக்காங்க என கூற அதற்கு ராகினி அவங்க சொத்தா வச்சி  தானே இவுங்க இவ்வளவும் சம்பாதிச்சாங்க அதை தானே எழுதி வாங்கி இருக்காங்க அதனால என்ன என பேசுகிறார் அதேபோல் வசுவும் இப்படி ஒரு சீட்டிங் பண்ணுனவன  இன்னும் நம்புறியா என பேச அம்மா அப்பாவை விட்டுக் கொடுக்க மாட்டாங்களா அதே மாதிரி தான் நானும் அர்ஜுன விட்டுக் கொடுக்க மாட்டேன் எனக் கூறுகிறார்.

உடனே கார்த்தி நீ என்ன எப்ப பாரு அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க இவ்வளவு பெரிய பிராடாக இருக்கான் அவனுக்கு போய் சப்போர்ட் பண்ற என பேசுகிறார். பிறகு ராகினி உங்களுக்கு பிறந்த நான்  உங்கள மாதிரி தான் இருப்பேன் நீங்க எப்படி அப்பாவை விட்டுக் கொடுக்கிறது இல்லையோ அதே மாதிரி தான் நானும் அர்ஜுன விட்டுக் கொடுக்க மாட்டேன் எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் உங்க ரெண்டு பேருக்கும் பொறந்தது நினைச்சு எனக்கு அருவருப்பா இருக்கு என பேச கோதைக்கு கண்ணீர் கலங்குகிறது.

அதுமட்டுமில்லாமல் அவர் எல்லா சொத்தையும் அவர் பேர்ல  எழுதிக்கிலையே என் பேருலதான எழுதி வச்சிருக்கார் என பேசுகிறார் உடனே இங்கே யாரும் வீட்டை விட்டு போக வேண்டாம் நாம எல்லாம் இங்கேயே இருக்கலாம் அர்ஜுன் யாரையும் வீட்டை விட்டு போக சொல்லல எல்லாரும் ஒண்ணா இங்கேயே இருக்கலாம் என்று தான் சொன்னாரு என பேசிக் கொண்டிருக்கிறார் ராகினி. உடனே கோதை நிறுத்து உங்களுக்கு சொத்து தான வேணும் எடுத்துக்கோங்க என வீரமாக பேசிவிட்டு கண்ணீருடன் வெளியே செல்கிறார்.

அந்த சமயத்தில் அம்மா என ராகினி கூப்பிட இனி அப்படி என்ன கூப்பிடாத ஒரு நாள் அவனுடைய சுயரூபம் உனக்கும் தெரியும் நீயும் தனியா நிப்ப அன்னைக்கு தான் எங்களோட அருமை உனக்கு புரியும் என பேசிவிட்டு வெளியே வருகிறார். வெளியே வந்த கோதை கோவிலுக்கு செல்கிறார் அனைவரும் கோவிலில் இருக்கிறார்கள் அப்பொழுது வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் அபி வருகிறார் அவர் என்னை ஏன் விட்டுட்டு வந்துட்டீங்க என பேச உடனே குழந்தையின் அனைத்து உடைகளையும் நான் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன் என பேசுகிறார்.

அப்பொழுது வசு நல்லா தூங்கிட்டு இருக்கான் எழுந்தா பசிக்குதுன்னு கத்துவான் என பேச அனைவரும் இன்னும் சாப்பிடலையா இன்னும் என  சரஸ்வதி கேட்கிறார் உடனே வாங்க வீட்டுக்கு போகலாம் என கூப்பிட கோதை விறு விறு என எழுந்து சாமியை பார்த்து கண்ணீர் கலங்க நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.