சரஸ்வதிக்கு எதிராக கோதையை நாசுக்காக ஏத்திவிட்ட அர்ஜுன் குடும்பம்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.

0
thamizhum-saraswathiyum-may-26
thamizhum-saraswathiyum-may-26

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி மற்றும் வசு இருவரும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அர்ஜுனனின் அக்கா ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் வசு கார்த்தி இப்பொழுது என் பேச்சை கேட்கிறதே கிடையாது என்னிடம் பேசுவதே கிடையாது குழந்தையை தூக்குவதே கிடையாது என சரஸ்வதி இடம் கூறிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு சரஸ்வதி நீ கார்த்தியிடம் எல்லாத்தையும் எடுத்து சொல் கண்டிப்பா புரிஞ்சுப்பான் அவர் அத்தை வளர்த்த பிள்ளை தான் கண்டிப்பா புரிஞ்சுப்பார் என கூறுகிறார். மேலும் வசு இது எல்லாத்துக்கும் காரணம் அர்ஜுன் தான் கார்த்தி ஒழுங்கா தான் இருந்தாரு இப்ப அவரையே மாத்திட்டாரு என வசு சரஸ்வதி இடம் கூறிக் கொண்டிருக்க எல்லாம் சரியாகிவிடும் கார்த்தியிடம் பேசு எடுத்து புரியவை என கூறிக் கொண்டிருக்கிறார்.

வசு குழந்தைக்கு பேர் வைக்கும் விழா ஒன்று ரெடி செய்யவும் அதில் அனைவரும் சேரலாம் எனக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். மறைந்து கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன் அக்கா ஓடிவந்து தன்னுடைய அம்மாவிடம் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் இவங்க ரெண்டு பேரும் பேசுறத ஃபர்ஸ்ட் கட் பண்ணனும் என சதி திட்டம் தீட்டுகிறார்கள். அடுத்த காட்சியில் வசு கார்த்தி இடம் நீ குழந்தையை தூக்குவதே கிடையாது குழந்தை அழுதால் என்னை ஏன் எதிர்பார்க்கிற நீயே தூக்கி வச்சிருக்க வேண்டியது தானே என கார்த்தி பார்த்து வசு கேட்கிறார்.

அதற்கு கார்த்தி எனக்கு வேற வேலையே இல்லையா இதுதான் வேலையா என்பது போல் திட்டி விடுகிறார் அது மட்டும் இல்லாமல். வசு குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டுமா அது நம்ம தான் முடிவு செய்யணும் என கூற நான் சொல்றத யாரு கேக்க போறீங்க இந்த வீட்ல யாரு சொன்னா கேட்பார்களோ அவர்கள் சொல்ல வேண்டியது தானே என தன்னுடைய அம்மாவை பற்றி கூறுகிறார். அதற்கு வந்து நீ அத்தை மேல இவ்வளவு கோவமா இருக்கிறது நியாயமே கிடையாது அவங்க நல்லதுக்கு தானே செய்றாங்க அதுல என்ன இப்ப ஏன் இவ்வளவு கோவமா இருக்க என வசு கேட்கிறார்.

இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொழுது கோதை மற்றும் நடேசன் இருவரும் கீழே ஏன் இவ்வளவு சத்தம் என கேட்க அர்ஜுன் குடும்பம் ரொம்ப நேரமா சண்டை போட்டுட்டு இருக்காங்க என கூறி விடுகிறார்கள். பிறகு கோதை வசுவிடம் தனியாக அழைத்து பேசுகிறார் அதற்கு வசு நீங்க கம்பெனியில தலையிடுவது கார்த்திக்கு பிடிக்கல நல்லது எது கெட்டது எதுன்னு உங்களுக்கே நல்லா தெரியும் ஒரு நல்ல முடிவா எடுங்க கார்த்தி தப்பு பண்ணினார் தான் அதுக்காக ஒரேடியா அவர ஒதுக்குறிங்க அதனாலதான் அவரு இவ்வளவு கோபமா இருக்கிறார் எனக் கூறுகிறார்.

அவர் இப்ப குழந்தை முகத்தை பார்க்கிறதே கிடையாது குழந்தையை கொஞ்சுவதும் கிடையாது, பேர் வைக்க வேண்டும் என கூறினால் அதற்கு நான் ஏதாவது சொல்லுவேன் அது என்ன கேட்கவா போறீங்க இந்த வீட்ல யார் சொல்றத கேக்குறீங்களோ அவங்க கிட்ட போய் கேளுங்க என கூறுகிறார் என வசு கோதையிடம் கூறுகிறார்.

இதை அனைத்தையும் அர்ஜுன் குடும்பம் ஒட்டு கேட்டு கொண்டு இருக்கிறது கோதை மாடிக்கு சென்ற பிறகு நைசாக வந்து இது எல்லாத்துக்கும் காரணம் சரஸ்வதி தான் வசுவும் சரஸ்வதியும் ரொம்ப நேரம் ஃபோன் பேசிட்டு இருந்தாங்க அப்பொழுது அத்த செய்யறது தப்புதான் அதை நீ தான் கேட்கணும்னு சொல்றா இது எல்லாத்துக்கும் காரணம் சரஸ்வதி தான் கம்பெனில தமிழ் குடைச்சல் கொடுக்கிறார் இங்க சரஸ்வதி வசவிடம் பேசி அவ மனச மாத்துறா என கூறி சரஸ்வதியை ஏத்தி விட்டுக் கொண்டிருக்கிறது அர்ஜுன் குடும்பம்.

இதனால் கோதை கடும் கோபத்திற்கு ஆளாகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.