அர்ஜுன் போட்ட திட்டத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய தமிழ்.! மாப்ள மறுபடியும் பல்பு வாங்கிட்டியே.! தமிழும் சரஸ்வதியும் பரபரப்பான இன்றைய எபிசோட்.!

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் செய்த நார வேலை அனைத்து முதலாளிகளுக்கும் கால் செய்து தமிழ் போல் அசோசியேஷன் எலெக்ஷனில் நான் ஜெயித்தால் பண உதவி செய்கிறேன் ஆர்டர் கொடுக்கிறேன் என மிமிக்கிரி ஆர்டிஸ்ட் வைத்து போன் செய்து தமிழை சிக்க வைத்துள்ளார்கள் இதிலிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்று தமிழ் அசோசியேஷன் ஆபீசை நோக்கி ஓடுகிறார்.

இவர் போவதற்குள் மற்ற ஓனர்கள் அனைவரும் அங்கே வந்து தமிழை கிழித்து தொங்க விடுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் நேர்மை இல்லாதவர் என பலரும்   பேசத் தொடங்கி விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த சமயத்தில் கார்த்தி மற்றும் அர்ஜுன் இவரை மாதிரி ஒருவர் எலக்ஷனில் நிற்பதே தவறு எனக் கூற உடனே அசோசியேஷன் ஆபீஸில் கோதையை மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ள வலியுறுத்துகிறார்கள்.

அதேபோல் மற்ற ஓனர்களும் கோதையை தலைவராக இருக்க வேண்டும் என கூற உடனே அர்ஜுன் நக்கலாக சிரிக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சொல்ல வருவதை யாரும் காது கொடுத்து கூட கேட்பது போல் தெரியவில்லை இந்த நிலையில் உமாபதி கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கிறீர்களா என கத்துகிறார். ஒரு தரப்பு நியாயத்தை மட்டும் வைத்துக்கொண்டு இதுபோல் ஒரு முடிவுக்கு வருவது தவறான செயல் உடனே தமிழ் எனக்கு 5 மணி வரை டைம் கொடுங்கள் நான் உண்மையை நிரூபிக்கிறேன் என கூறிவிட்டு வெளியே செல்கிறார்.

அதேபோல் வீட்டில் அர்ஜுன் மற்றும் கார்த்தி இருவரும் நீங்கள் தான் அடுத்த தலைவர் என கேக் கொடுத்து கொண்டாடுகிறார்கள் கோதையிடம் அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் கோதை நேர்மை இல்லாமல் ஜெயிக்க பார்க்கிறான் எனக் கூற உடனே வசு அதற்கு மாமா என்ன சொன்னார் என கேட்க 5 மணி ஆனவுடன் நிரூபிக்கிறேன் என கூறியதாக கார்த்தி கூற அப்ப கண்டிப்பா நிரூபிப்பார் மாமா அவர் மேல தப்பு இல்லன்னு நிரூபிப்பார் என கூறுகிறார்.

அவன் எந்த ஒரு நிலையிலும் செய்யும் தொழிலுக்கு துரோகம் செய்ய மாட்டான் அவன் நேர்மையாக தான் இதுவரை நடந்து கொண்டான் நேர்மையாக தான் இருப்பான் அதனால் சாயந்திரம் 5 மணிக்குள் நிரூபித்து விடுவான் என நடேசன் கூறுகிறார். தொழில்துறை அமைச்சரை சந்திக்க சென்றுள்ளார் தமிழ் அது மட்டும் இல்லாமல் அந்த நம்பரை கொடுத்து யார் என கண்டுபிடிக்க கூறுகிறார்கள் இந்த நம்பர் நீலாங்கரையில் உள்ள ஒரு அட்ரஸில் இருக்கிறது என கூறுகிறார்.

உடனே போலீஸ் உடன் தமிழ் நீலாங்கரைக்கு செல்கிறார் அங்கு ஒரு பெண் இருக்கிறார் அவரிடம் விசாரித்த பொழுது என் கணவர் ஒரு மாதத்திற்கு முன்பே இறந்து விட்டார் எனக் கூற சரஸ்வதி கிளம்பும் நேரத்தில் ஒரு புகைப்படத்தை பார்க்கிறார் அந்த புகைப்படத்தில் ஏற்கனவே தமிழ் கம்பெனியில் வேலை செய்து திருடி மாட்டிக் கொண்ட ஜெகன் போட்டோ இருக்கிறது அதை பார்த்த சரஸ்வதி யார் என்று விசாரிக்கிறார்.

அதே போல் போலீசும் யார் என்று விசாரிக்கிறார்கள் உடனே அவர் மாம என குழந்தை கூறுகிறது. உடனே ஜெகனை தேடி போலீஸ் மற்றும் தமிழ் செல்கிறார்கள் அதற்குள் அசோசியேஷன் ஆபீஸில் மணி 5 ஆனாலும் தமிழால் நிரூபிக்க முடியாது என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 5 மணி ஆவதற்கு இன்னும் ஐந்து நிமிடம் தான் இருக்கிறது அதற்குள் என்ன செய்ய முடியும் நாளை வரை டைம் தான் கேட்பார் என கார்த்தி மற்றும் அர்ஜுன் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

ஆனால் உமாபதி இடம் மற்றவர்கள் கேட்கும் பொழுது இன்னும் ஐந்து மணி ஆவதற்கு ஐந்து நிமிடம் இருக்குது கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள் சார் கண்டிப்பாக தமிழ் வந்து விடுவார் என கூற ஆனாலும் அனைவரும் கத்திக் கொண்டே இருக்கிறார்கள் அந்த சமயத்தில் தமிழ் பரபரப்பாக உள்ளே வருகிறார். என்ன தமிழ் உங்களால் நிரூபிக்க முடியலையா அடுத்து கொஞ்ச நாள் டைம் கேக்குறீங்களா எனக் கேட்க உடனே சரஸ்வதி அவர் எதற்கு நிரூபிக்க முடியாமல் இருப்பார் அவர் ஆதாரத்துடன் நிரூபிப்பார் என நமச்சியை கூப்பிடுகிறார்கள்.

அப்பொழுது போலீஸ் ஜெகனையும் அழைத்து வருகிறார்கள் அப்பொழுது அர்ஜுனின் முகம்  பயத்தில் நடு நடுங்குகிறது. ஆனாலும் உண்மையை சொல்லு என போலீசுக்கு கூறும் பொழுது அர்ஜுன் ஜெகனை பார்த்து சொல்லாதே என கண் சைகை  செய்கிறார் இதனை புரிந்து கொண்ட ஜெகன் என்னை வேலையை விட்டு தூக்கியதால்தான் இவ்வாறு நடந்து கொண்டேன் என பொய் சொல்லி விடுகிறார் அர்ஜூனை காட்டிக் கொடுக்காமல் இருந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment

Exit mobile version