அம்மா 8 அடி பாஞ்சா புள்ள 16 அடி பாயும் என நிரூபித்த தமிழ்.! ஓட்டுக்காக தொழிலாளியை பகைத்துக் கொண்ட கோதை.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் பிரேம் ஆபீஸில் தொழிலாளிகள் ஸ்டிரைக் பண்ணுவதால் அதை சரி செய்தால் ஓட்டு கிடைக்கும் என கோதை கிளம்பி செல்கிறார். அங்கு சென்ற முதலாளியை சந்தித்து என்ன பிரச்சனை என கேட்கிறார் இப்பொழுது நான் மிகவும் நஷ்டத்தில் இருக்கிறேன் இந்த நேரத்தில் தொழிலாளிகள் ஸ்ட்ரைக் பண்ணுகிறார்கள் என கூற உடனே யூனியன் லீடரை அழைத்து பேசுகிறார்கள்.

கோதையை பிரேம் அறிமுகம் செய்து வைக்கிறார் யூனியன் லீடருக்கு ஆனால் இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை எல்லாருக்கும் தெரியும் என கூறுகிறார் யூனியன் லீடர் திடீரென இப்படி ஸ்ட்ரைக் பண்ணீங்கன்னா உங்களுக்கு நஷ்டம் தான் அவங்களுக்கு நஷ்டம் தான் இப்பொழுது பாதி சம்பளத்துக்கு வேலை செய்யுங்கள் நிலைமை சரியானதும் சரி செய்து விடலாம் என கூற அதற்கு உடனே யூனியன் லீடர் அதெல்லாம் முடியாது அப்படி என்றால் நாலு மாத சம்பளத்தை உடனடியாக கொடுங்கள் என கோரிக்கை வைக்கிறார்.

நாலு மாத சம்பளத்தை எப்படி தர முடியும் என கோதை யூனியன் லீடரிடம் பாய்கிறார் அதுமட்டுமில்லாமல் நீங்கள் வேலை செய்தால்தான் முதலாளிகள் பொழைக்க முடியுமா வேறு ஆட்களை இறக்குவேன் என வார்த்தையை விட்டு விடுகிறார் உடனே யூனியன் லீடர் உங்க மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி விடுகிறார். அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் கார்த்தி நம்ம ஆபீஸ்ல இருந்து பாதி லேபரை வரவழைத்து வேலையை பார்க்கலாம் எனக் கூற அதற்கு நடேசன் அதிர்ச்சி அடைந்து அதெல்லாம் வேணாம் என கூறுகிறார்.

இந்த விஷயம் நமச்சிக்கு தெரிய வர உடனே தமிழ் இடம் கூறுகிறார் பிரேம் சார் ஆபீஸில்  ஸ்ட்ரைக் நடப்பதாகவும் அதனை சரி செய்ய கோதை சென்றதாகவும் ஆனால் அவர் முதலாளிக்கு மட்டும் சப்போர்ட் செய்து பேசியதால் சரிப்பட்டு வரவில்லை எனவும்  நமச்சி தமிழிடம் கூறுகிறார் உடனே தமிழ் தொழிலாளியை பத்தி யாருமே யோசிக்கலையா அவங்கள பத்தி யோசிச்சா தானே ஒரு சுமூகமான முடிவு வரும் எனக் கூற. இந்த சமயத்தில் தொழிலாளிக்கு சப்போர்ட் செய்தால் ஓட்டு கிடைக்காது என சரஸ்வதி நினைக்க அதெல்லாம் பிரச்சனை இல்லை முதலில் தொழிலாளிகளின் பிரச்சினையை தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ் கூறிவிட்டு என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது நாம் தொழில்துறை அமைச்சரை சந்தித்து பேசலாம் என கூற உடனே அனைவரும் கிளம்புகிறார்கள்.

தொழில்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் நடந்த அனைத்தையும் எடுத்துக் கூறுகிறார் அம்மாவும் பையனும் போட்டி போட்டுக் கொள்வது வித்தியாசமாக இருக்கிறது எனவும் இருந்தாலும் இரண்டு பேருக்கும் இந்த பதவிக்கு தகுதியானவர்கள் என கூறுகிறார் இதுதான் அரசியல் இதுதான் எலக்சன் என்பது போல் கூறிவிடுகிறார்.உடனே பிரேம் மற்றும் யூனியன் லீடரை வரவழைத்து உள்ளார்கள்.

பிரேம் வந்தவுடன் இவர்கள் முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் வேலை செய்வேன் என கூறுகிறார்கள் ஆனால் என்னால் இப்பொழுது கொடுக்க முடியாது என திட்டவட்டமாக பிரேம் கூற உடனே யூனியன் லீடர் எங்களுக்கு சம்பளம் கொடுக்க தான் முடியவில்லை. ஆனால்  மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல காசு இருக்கிறதா என கேட்கிறார் என்னுடைய சொந்த விஷயம் நீங்க செய்யும் டார்ச்சர் ஆள் தான் நான் சென்றேன் என்பது போல் கூறிவிடுகிறார்.

உடனே யூனியன் லீடர் முதலாளி பிரேம் இருவரும் சண்டை போடுவதில் போல் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் ஒரு யோசனை இருக்கிறது இதை கேளுங்கள் என கூற பாதி சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டு நான்கு மாதம் வேலை செய்யட்டும் ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா போய் வேலை செய்யட்டும் தொழிலாளிகள் எனக் கூற யூனியன் லீடர் என்ன தம்பி நீங்களே இப்படி சொல்றீங்க நீங்களும் தொழிலாளியா இருந்தவர் தானே தொழிலாளி கஷ்டம் உங்களுக்கு தெரியாதா என கேட்கிறார்..

இருங்க அண்ணே நான் சொல்லி முடிக்கல பஸ்ட் சொல்றத கேளுங்க எனக் கூற உடனே தமிழ் நான்கு மாதம் அரை சம்பளத்துடன் ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா வேலை செய்யட்டும் நான்கு மாதத்திற்கு பிறகு முழு சம்பளத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறார். உடனே தொழில் துறை அமைச்சர் இது நல்ல அருமையான யோசனையாக இருக்கிறது இது நல்ல ஒரு முடிவு தான் என்பது போல் கூற உடனே யூனியன் லீடரிடம் இதற்கு ஓகேவா என தொழில் துறை அமைச்சர் கேட்க அதற்கு யூனியன் லீடர் எங்களுக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்காரு இந்த நாலு மாதம் ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா வேலை செய்றதுல எங்களுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது என்பது போல் கூறிவிடுகிறார்.

அடுத்தது முதலாளியிடம் கேட்க இந்த நாலு மாதம் எனக்கு போதும் எப்படியாவது சரி செய்து விடுகிறேன் என்பதை கூறுகிறார் பின்பு இருவரும் பேசி  ஒரு சுமுக முடிவுக்கு வருகிறார்கள். இந்த விஷயம் எப்படியோ உமாபதி சாருக்கு தெரிய வருகிறது உடனே தமிழை அழைத்து ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுகிறார் அது மட்டும் இல்லாமல் எனக்கு நம்பிக்கை வந்து விட்டதாகவும் கூற இதெல்லாம் தமிழ் செய்ததால் தான் எனக் கூறுகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment

Exit mobile version