தமிழை ஜெயிக்க மாப்பிளையை விட மகா மட்டமான வேலையை பார்த்த கோதை.! கேவலப்பட்ட அர்ஜுன்.. ஆடிப் போன உமாபதி.!

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோதை, அர்ஜுன், கார்த்தி மற்றும் நடேசன் மூவரையும் அழைத்துள்ளார் எப்படியாவது எலக்ஷனில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சதி திட்டம் தீட்டினார் கோதை அதன் பிரதிபலனாக கார்த்தி மற்றும் அர்ஜுனுடன் இனி தமிழை பற்றி பேசி ஓட்டு கேட்க வேண்டாம் எனக் கூற அதற்கு அர்ஜுன் அவரைப் பற்றி பேசினால் தான் நமக்கு ஓட்டு கிடைக்கும் என்பது போல் கூறுகிறார் ஆனால் கோதை தமிழ் பேசுவதை நிறுத்தி விட்டான் நம்ம மீது கெட்ட எண்ணம் மற்றவர்களிடம் வரும் என்பதற்காக தான் இது போல் ஒரு ப்ளான் போட்டு உள்ளான் எனக் கூறுகிறார் கோதை.

பிறகு எப்படி ஜெயிப்பது தமிழைப் போல் நாமும் என்ன நல்லது செய்யலாம்  என்பதை ஒரு பெரிய லிஸ்ட் ரெடி பண்ணலாமா என கார்த்திக் கேட்க உடனே கோதை அதெல்லாம் வேண்டாம் நம்மள மாதிரி பெரிய கம்பெனி எத்தனை இருக்கிறது சின்ன கம்பெனி எத்தனை இருக்கிறது என கேட்க பெரிய கம்பெனி தான் அதிகம் என கூறுகிறார் சின்ன கம்பெனி பத்து பதினைந்து தான் இருக்கும்  என கார்த்திக் கூற உடனே கோதை பெரிய கம்பெனி லிஸ்ட் எடுங்கள்.

பெரிய கம்பெனியில் டாப் 10 லிஸ்டில் இருக்கும் முதலாளிகளை அழைத்து பேசினாலே  அவர்கள் சொல்வதை தான் சின்ன கம்பெனிகள் கேட்கும் அதனால் பெரிய கம்பெனியை நம் வழிக்கு கொண்டு வர வேண்டும் நாளைக்கு அதற்கு மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்கள் என கூறுகிறார். இந்த சமயத்தில் பெரிய கம்பெனி முதலாளிகளை அடுத்த நாள் வர சொல்லியுள்ளார்கள். பிரபல தொழிலதிபர் ஒருவர் வர அவரிடம் நீங்கள் ஜெர்மனியில் இருந்து ஒரு மெஷின் இம்போர்ட் பண்ணி இருக்கீங்களா அந்த மெஷின் சரி இல்ல நான் சொல்ற பிராண்ட் வாங்கி யூஸ் பண்ணி பாருங்க என்பது போல் அர்ஜுன் கூற உடனே நான் எவ்ளோ பெரிய கம்பெனி வச்சுட்டு இங்க ரன் பண்ணிட்டு இருக்கேன் நீ எல்லாம் எனக்கு வந்து அட்வைஸ் பண்றியா என்பது போல் அர்ஜுனை நோஸ்கட் செய்து விடுகிறார்.

இதனை கோதை மட்டும் மற்றவர்களும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் பெரிய முதலாளி இடம் கோதை பேசுகிறார் அப்பொழுது தமிழ் இப்பொழுதுதான் கம்பெனி ஸ்டார்ட் செய்துள்ளார் அவருக்கு கீழ் அடிபணிந்து அவர் உத்தரவுக்கு கீழ் நீங்கள் வேலை பார்க்க போகிறீர்களா என்பது போல் கோதை கேட்க உங்களிடம் என்னுடைய மாப்பிள்ளை சொன்ன ஒரு சின்ன விஷயத்தை கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை நீங்கள் எப்படி ஒரு சின்ன லேத்து கம்பெனி முதலாளிக்கு கீழ் வேலை பார்க்க முடியும் என்பது போல் கேட்டு விடுகிறார்.

அதனால் பெரிய கம்பெனி முதலாளிகள் அனைவரும் கோதைக்கு தான் சப்போர்ட் செய்வோம் என்பது போல் கூறி விடுகிறார்கள். அடுத்த காட்சியில் வெளியில் அமர்ந்து கொண்டு நோட்டை வைத்துக் கொண்டு இன்னும் சில பாயிண்ட்களை நோட் பண்ணிக் கொண்டிருக்கிறார் தமிழ்  சரஸ்வதி தமிழிடம் வந்து பேச எரிந்து எறிந்து பேசுகிறார் இதனால் காண்டான சரஸ்வதி எப்ப பாரு சரஸ்வதி தான் கூப்பிடுறாரு மயில் என்று கூப்பிடவில்லை என புலம்பி கொண்டிருக்கிறார்.

எலக்ஷனில் ஜெயித்த பிறகு மயில் என்று கூப்பிடுகிறேன் என தமிழ் கூறிவிடுகிறார் அடுத்த நாள் உமாபதி சார் வரவழைத்துள்ளார் அங்கு போன தமிழ் நமச்சி சரஸ்வதி மூவரும் உட்காருகிறார்கள் அப்பொழுது நாம ஜெயிப்போம் என்பது மிகவும் குறைவாக தெரிகிறது ஏனென்றால் கோதை அம்மா அனைத்து பெரிய முதலாளிகளை கூப்பிட்டு சிறிய முதலாளிக்கு கீழ் வேலை பார்க்க முடியுமா என்பது போல் கேட்டு உள்ளார் அதனால் பெரிய முதலாளிகள் அனைவரும் கோதைக்கு சப்போர்ட் செய்ய இருக்கிறார்கள்.

கோதை இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை முதலாளிகள் தொழிலாளிகள் என அனைவரும் சமம் என்பது போல் தான் பேசினார் ஆனால் இப்பொழுது இப்படி பேசுகிறார் என சரஸ்வதி அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் இனி பெரிய முதலாளிகளின் ஓட்டு நமக்கு கிடைக்காது என்பது போல் உமாபதி கூற உடனே தமிழ் எனக்கும் சில பெரிய முதலாளிகளை தெரியும் நானும் போய் பார்க்கிறேன் என்பது போல் தமிழ் கூறிவிட்டு செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment

Exit mobile version