ரவுடியை காரை வைத்து இடித்து அந்த பழியை தூக்கி தமிழ் மீது போட்ட அர்ஜுன்.! மேகனா எடுத்த விபரீத முடிவு .. சிக்குவாரா மாப்பிள்ளை..

Thamizhum saraswathiyum today Episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் ரவுடியை அடித்து தூக்கி தமிழ் மீது பழியை போட பக்கவாத பிளான் செய்கிறார், அதனால் தமிழை வெட்ட வந்த ரவுடி மீண்டும் தமிழ் கண்ணில் படும்படி செய்கிறார் அதனால் தமிழ் ஆவேசப்பட்டு காரில் துரத்துகிறார். பிறகு அந்த ரவுடி எஸ்கேப் ஆகி விடுகிறார்.

உடனே அந்த ரவுடி அர்ஜுனை சந்திக்கப் போகிறார் அப்பொழுது அர்ஜுன் பணத்தை கொடுத்து இனிமேல் தமிழ் கண்ணில் படக்கூடாது என கூறிவிடுகிறார். சிறிது நேரத்தில் பைக்கில் போய்க் கொண்டிருக்கும் ரவுடியை காரில் போய் அர்ஜுன் இடித்து கொலை செய்து விடுகிறார். ஆனால் அந்த ரவுடி மயக்க நிலையில் இருப்பதால் ஹாஸ்பிடலில் சேர்ந்து விடுகிறார்கள்.

உடனே தமிழ் கம்பெனிக்கு வருகிறார் அப்பொழுது வெட்ட வந்த ரவுடியை துரத்தி போனதை கோதை நடேசன் சரஸ்வதி கார்த்தி என அனைவரிடம் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே நமச்சி இடம் அபி, அர்ஜுன் தமிழை ஜெயிலுக்கு அனுப்ப ஏதோ திட்டம் போட்டுள்ளதை கூறியுள்ளார்.

நமச்சி வந்ததும் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்கிறார் அப்பொழுது நடந்ததை கூறும் பொழுது அந்த அர்ஜுன்தான் ஏதோ திட்டம் போட்டு இருக்கான் பெருசா இந்த முறை கண்டிப்பா நம்மள ஏதாவது பண்ணுவான் என கூறிக் கொண்டிருக்கும் பொழுது போலீஸ் வருகிறார்கள். அந்த ரவுடியை துரத்தி சென்று நீங்கள் தானே இடித்தீர்கள் என தமிழை பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.

ஆனால் நாங்கள் எதுவும் செய்யவில்லை எனக் கூறியும் ஊரில் உள்ள பலரும் பார்த்து உள்ளார்கள் அதனால் உடனே உங்களை அரெஸ்ட் செய்ய வேண்டும் என கூறுகிறார் ஆனால் மேகனா தான் கார் ஓட்டி சென்றேன் என பழைய தூக்கி தன் மீது போட்டுக்கொண்டு ஜெயிலுக்கு போகிறார்.

மற்றொரு பக்கம் அர்ஜுன் மேகனா ஜெயிலுக்கு போனதால் தமிழ் தப்பித்து விட்டார் என புலம்பி கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ராகினி தமிழ் அண்ணனுக்காக மேகனா ஜெயிலுக்கு போய் விட்டார் தமிழுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என புலம்பி கொண்டிருக்கும் பொழுது இதெல்லாம் வேண்டும் என்று திட்டம் போட்டு செய்துள்ளார்கள் என அபி கூறுகிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் வீட்டில் அனைவரும் இடிந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது இதையெல்லாம் அர்ஜுன்தான் செய்திருப்பார் என கண்டுபிடித்து விடுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.