ஆதாரம் சிக்கியது கூண்டோடு ஜெயிலுக்கு போகபோகும் அர்ஜுன் குடும்பம்.! பரமனை நோக்கி விரைந்த போலிஸ்

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும்  சீரியலில் இன்றைய எபிசோடில் பரமு ஓடிவந்து அர்ஜுனிடம் மாப்ள நம்ம நினைச்ச மாதிரியே எல்லாமே அமைஞ்சிடுச்சு அந்த ரவுடிங்க சரண் அடைஞ்சிட்டாங்க அவங்களுக்கு பணம் கொடுத்தாச்சு என பேசுகிறார். உடனே அர்ஜுனனின் அம்மா என்ன ரவுடி என்ன பணம் என கேட்கிறார் உடனே நடந்த அனைத்தையும் அவரிடம் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் கீழே சென்று ராகினியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதி இப்பொழுது எங்கே இருக்கிறார் என அர்ஜுனிடம் கேட்கிறார் அப்பொழுது கொலை பண்ணவா எங்க இருப்பா ஜெயிலில் தான் இருப்பார் என அர்ஜுனனின் அக்கா கூறுகிறார் ஆனால் ராகினி சரஸ்வதி அண்ணி கண்டிப்பா கொலை செஞ்சி இருக்க மாட்டாங்க என பேசுகிறார்.

அர்ஜுனின் அம்மா அதே போல் அவர்தான் கொலை செய்திருப்பார் என நக்கலாக பேசுகிறார் உடனே அபி கொலை செஞ்சவங்க கண்டிப்பா தப்பிக்க முடியாது கண்டிப்பா ஒரு நாள் சிக்குவான் என பேசுகிறார். அடுத்த காட்சியில் உடனே ராகினி கண்டிப்பா அண்ணியை தமிழன்னா வெளிய எடுத்துருவாரு ஏன்னா அண்ணி மேல அவ்வளவு உசுரா இருப்பார் என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் கோதை குடும்பம் சரஸ்வதி உள்ளே இருப்பதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் கார்த்தி தமிழ் உள்ளே வருகிறார்கள் அவர்களிடம் மினிஸ்டரை பார்த்தீர்களா என்ன சொன்னார் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனீங்களா என அனைத்தையும் விசாரித்துக் கொண்டிருக்கிறார் வசு அதற்கு கார்த்தி நாங்க போலீஸ் ஸ்டேஷன் போனோம் தமிழ் அண்ணனை அடிச்சத கம்ப்ளைன்ட் பண்ண போனோம் ஆனா  அப்ப அந்த ரவுடிகள் எல்லாம் வாண்டடா வந்து சரணடைஞ்சாங்க இதுவும் அந்த அர்ஜுன் வேலையா தான் இருக்கும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்த காட்சியில் தமிழ் சரஸ்வதி இடம் பழகியது கஷ்டப்பட்டது என அனைத்தையும் நினைத்துக் கொண்டிருக்கிறார் அதேபோல் அந்தப்பக்கம் சரஸ்வதி தமிழை நினைத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஜெயிலில் சாப்பாடு தள்ளி விடுகிறார்கள் எதுக்கு இப்படி சாப்பாட்டை  தள்ளி விடுறீங்க என சரஸ்வதி கேட்க ஜெயில் வார்டன் கோபப்பட்டு அடிக்க கை ஓங்குகிறார். அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் கார்த்திக் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள் அப்பொழுது  அர்ஜுன் மீதும்  கலிவரதன் மீதும் சந்தேகம் இருப்பதை கூறுகிறார்கள்.

சந்தேகத்தை வைத்துக்கொண்டு நாம் ஒன்றும் பண்ண முடியாது ஏதாவது ஒரு எவிடன்ஸ் வேண்டும் என பேசுகிறார்கள் அந்த சமயத்தில் பாரன்சி ரிப்போர்ட் தடயம் என அனைத்தையும் கான்ஸ்டபிள் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் அப்பொழுது சரஸ்வதியின் முடி அங்கு இருந்ததாகவும் அதனால் இந்த கேசில் இருந்து நாம் எதுவும் பண்ண முடியாது என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்த காட்சியில் ஒரு கண்ணாடியின் துண்டு கிடைக்கிறது இது பரமனுடைய கண்ணாடி துண்டு என தமிழ் உறுதிப்படுத்துகிறார் உடனே போலீஸ் அப்படியா கண்டிப்பா தெரியுமா என பேசுகிறார்கள் உடனே பரமனை  நோக்கி போலீஸ் படை எடுக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.