தமிழை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த மேகனா.! திருமணமான உண்மையை கூறும் சரஸ்வதி..

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் நமச்சி மேகனாவிடம் உண்மையை சொல்லப் போகிறேன் என மேகனாவை பார்க்க போகிறார். ஆனால் அப்பொழுது மேகனா தன் மாமா கால் செய்து நம்ம கம்பெனியில் தவறு செய்தவன் மீண்டும் வந்துள்ளான் வேலை கிடைக்கவில்லை பொண்டாட்டி பிள்ளை ரொம்ப கஷ்டப்படுறாங்க என புலம்புகிறான் என பேச அது என்னுடைய மிஸ்டேக் இல்ல அவன் ஏன் அந்த தப்பா செஞ்சான் இதுக்கு மேல உனக்கு இங்க வேலையே கிடையாது என துரத்துகிறான் மேகனா.

இதனைப் பார்த்த நமச்சி எங்கு நாம் உண்மையை சொன்னால் நமக்கு இதே நிலைமைதான் என என்னி மேகனாவிடம் இருந்து மீண்டும் உண்மையை மறைக்கிறார் அதற்கு பதிலாக தமிழுக்கு ஒரு எதிரி இருக்கிறான் அவன் தமிழைப் பற்றி தப்பு தப்பாக சொல்வான் தமிழுக்கு திருமணமாகிவிட்டது எனக் கூட கூறுவான் அதெல்லாம் நீங்கள் நம்பாதீர்கள் என பேசுகிறார்.

BIGGBOSS 7 : கூடி சிரிச்சு விளையாடுவோம் போட்டின்னு வந்தா வச்சி செய்வோம்.. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய ஒரே ஒரு நபர்

அடுத்த காட்சியில் மேகனா தமிழுடன் ஒரு ரெய்டு போகிறார் அப்பொழுது எங்கு போகலாம் என கேட்க உங்களுக்கு பிடித்த இடத்தில் சாப்பிட போகலாம் என கூறுகிறார் நான் சாப்பிடும் இடத்தில் நீங்கள் சாப்பிட மாட்டீர்கள் அது ரொம்ப சாதாரண இடம் என கூறுகிறார் பரவால்ல வாங்க போகலாம் என மேகனாவை அழைத்து கொண்டு போகிறார் அங்கு சாப்பிட்டு வீட்டு கிளம்பும்போது ஒரு பிரச்சனை ஏற்படுகிறது அதாவது சில ரவுடிகள் காரில் வந்து இடிப்பது போல் பைக்கை நிறுத்துகிறார்கள்.

இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது ஆனால் திடீரென சமாதானமாகி செல்கிறார்கள் பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட போகிறார்கள் அங்கும் அந்த ரவுடிகள் வந்து பிரச்சனை செய்கிறார்கள் அங்க தான் கூட்டமா இருந்துச்சு. உங்களை அடிக்க முடியல இங்க வாங்க பொளந்து கட்டுகிறோம் என ரவுடிகள் தமிழை அடிக்கிறார்கள் அந்த சமயத்தில் தமிழ் அனைவரையும் தாக்கிக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் கத்தியை எடுத்து தமிழை வெட்டுவதற்கு கையை ஓங்குகிறார் அப்பொழுது மேகனா கத்தியை பிடித்து தன் மீது வேட்டை வாங்கி கொள்கிறார்.

உங்க மரியாதையை தூக்கி குப்பையில போடுங்க.. காசு கொடுத்தா வரேன்.. ரூட்டை மாற்றிய மீனா.!

இதனால் மயக்கமாக மயங்கி விழுகிறார் பின்பு ஹாஸ்பிடல் சேர்க்கிறார்கள் ஹாஸ்பிடல் தமிழ் மேகனா மற்றும் மேகனா அம்மா என அனைவரும் இருக்கிறார்கள். அப்பொழுது தமிழின் குடும்பம் மேகனாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது எங்க உண்மை தெரிந்து விடுமோ என மேகனாவின் அம்மாவை அழைத்துக் கொண்டு சாப்பிட அனுப்பி வைக்கிறார் நமச்சி. அதையும் மீறி சரஸ்வதி என் தாலியை காப்பாற்றி கொடுத்து விட்டீர்கள் என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.