கட்டின பொண்டாட்டிய பக்கத்திலேயே வச்சுக்கிட்டு செய்ற விஷயமா தமிழ்.! கண்ணீரில் மிதக்கும் சரஸ்வதி..

Thamizhum saraswathiyum today episode : தமிழும்  சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழுக்கு பிறந்தநாள் என்பதால் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் அப்பொழுது கேக் வெட்டி அனைவரும் கொண்டாட ரெடியாகிறார்கள் ஹாப்பி பர்த்டே டூ யூ என அனைவரும் பாட்டு பாட தமிழ் கேக் வெட்டுகிறார். தமிழ் கேக் வெட்டி முதலில் சரஸ்வதிக்கு ஊட்டி விட்டால் பெரிய பிரச்சனை வந்து விடுமே என நமச்சி பயந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் தமிழ் கேட்க வெட்டி மேகனாவிற்கு முதலில் ஊட்டுகிறார் இதனை பார்த்த சரஸ்வதி கண்ணீரில் மிதக்கிறார் அது மட்டும் இல்லாமல் வசு என்ன மாமா இப்படி பண்ணிட்டாரு என அதிர்ச்சடைகிறார். அதுமட்டுமில்லாமல் கேக் வெட்டியவுடன் தமிழுக்கு மேகனா ஒரு பரிசை வைத்துள்ளேன் என கூறுகிறார் என்ன என தமிழ் ஆர்வத்துடன் கேட்க விலை உயர்ந்த காரை தமிழுக்கு பரிசாக கொடுக்கிறார்.

உடனே அனைவரும் வெளியே வந்து காரை பார்க்கிறார்கள் இந்த நிலையில் அடுத்த காட்சியில் சரஸ்வதி கலங்கியபடி வசுவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மேகனா கொடுத்த விலை உயர்ந்த கார் கிப்ட்டுக்கு முன்னாடி இந்த ரிங் அவ்வளவு பெருசு எல்லாம் கிடையாது என கண்கலங்கியபடி கூற உடனே வசு நீங்க உங்க கிப்டை கொடுங்க சரஸ்வதி அதுதான் தமிழ் மாமாவுக்கு மிகப்பெரிய கிஃப்ட் என பேசுகிறார்.

ஆனால் சரஸ்வதி இப்போதைக்கு இது கொடுக்கவே தேவையில்லை இது அவ்வளவு பெரிய காஸ்ட்லி கிப்ட் கிடையாது அதனால நானே கொடுக்க வேண்டாம் என்று முடிவு பண்ணிட்டேன் என கூறிவிட்டு செல்கிறார். அதேபோல் அடுத்த காட்சியில் பிறந்தநாள் பார்ட்டியில் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது  தமிழிடம் உன் மனதில் உள்ளதை சொல்லு என மேகனாவின் வேலைக்கார அம்மா கூறுகிறார்.

உடனே மேகனாவும் தன்னுடைய மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துகிறார் ஆனால் அங்கு நிற்பது தமிழ் கிடையாது நமச்சி தான் இதை அனைத்தையும் கேட்ட நமச்சி அதிர்ச்சி அடைகிறார். அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் தமிழ் வர கோர்ட்டை போட்டுக் கொண்டு மேகனாவிடம் சென்று என்னை ஒவ்வொரு விஷயத்திலும் அதிகமாக இம்ப்ரஸ் செய்து விட்டீர்கள் என் வாழ்க்கையில் கடவுள் அனுப்பிய தேவதை நீங்கதான்.

என் வாழ்க்கை முழுவதும் நீங்கள் கண்டிப்பாக வேண்டும் என பேசுகிறார் தமிழ் இதனை கேட்ட மேகனா சந்தோஷத்தில் மிதக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.