அர்ஜுன் கை காலை உடைத்து மூளையில் உட்கார வைத்த மேக்னா.! மாப்பிள கரண்ட்னு தெரியாம கைய வச்சுட்டியே..

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் மேகனா இருவரும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் நீங்கள் தான் என் உயிரை காப்பாற்றியது என தமிழ் கூற நீங்களும் தான் என் உயிரை காப்பாற்றி உள்ளீர்கள் என மேகனா கூறுகிறார் இப்படி மாறி மாறி புகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் பயங்கர கேடி ஆச்சு எப்படி அவனை சமாளிச்சுங்க என கேள்வி எழுப்புகிறார் தமிழ்.

அப்பொழுது மேகனா தமிழிடம் கதையை கூறுகிறார் அதாவது மினிஸ்டரை பார்க்க சென்றார் மேகனா அப்பொழுது அர்ஜுன் தான் இந்த மெட்டீரியலை திருடினார் ஆனால் ஆதாரம் இல்லை எனக் கூற மேகனா எனக்கு ஒரு ஐடியா தோணுகிறது என கூறி எல்லா டிபார்ட்மென்ட் ஆபீஸிலிருந்தும் அவனுக்கு ரைட் அனுப்புங்கள் என கூறுகிறார் இது சரியான ஐடியா உடனே செய்து விடுகிறேன் என ரைடு அனுப்புகிறார்கள்.

குவாலிட்டி செக்கிங், மின்சாரத்துறை,  இன்கம் டேக்ஸ் ரைடு, என அனைத்து துறைகளும் செல்கிறார்கள் அப்பொழுது அனைவரும் ஒவ்வொரு குறையாக சொல்ல குவாலிட்டி செக்கிங் இல் இந்த பொருள் நல்ல குவாலிட்டியாக இருக்கிறது இது குவாலிட்டி இல்லையே என்னன்னு சொல்லுங்க என கேட்க அந்த சமயத்தில் மேக்னா வந்து அது தமிழ் கம்பெனியில் இருந்து வந்த பொருள் அதனால குவாலிட்டியா இருக்கும் எனக் கூறுகிறார்.

ஒழுங்கா எல்லாத்தையும்  ஒத்துக்கோ இல்லன்னா போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சு விசாரிப்பாங்க என பேச உடனே அர்ஜுன் மாமா என்னால் அடி வாங்க முடியாது என உண்மையை கூறி விடுகிறார் ஆனால் அர்ஜுன் கம்பெனியில் இன்னும் ரைடு சென்று கொண்டு தான் இருக்கிறது அந்த சமயத்தில் தமிழ் மற்றும் மேகனா இருவரும் அர்ஜுனை பார்க்க வருகிறார்கள்.

அர்ஜுனை பார்த்து நீ என் மேல கைய வைத்திருந்தால் கூட தப்பிச்சி இருக்கலாம் நீ கைய வச்சது மேகனா மேல அவங்க பொருளையே தூக்க உனக்கு தைரியம் வந்துடுச்சா நீ எல்லாம் அவங்க முன்னாடி ஒரு தூசிக்கு சமம் என பஞ்ச் பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் மேகனா நீ தமிழ் மேலே கைய வைக்கிறியா தமிழுக்கு இவ்வளவு தொல்லை கொடுத்து இருக்கியா இனிமே உன்ன விட்டு வச்சா தானே என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது கவர்மெண்டில் இருந்து ஒரு ஆர்டர் வந்துவிட்டது அதாவது இந்த கம்பெனியை காலவரையின்றி மூடுவதற்கு சம்மன் அனுப்பி உள்ளது நீதிமன்றம்.

கம்பெனி எதுக்கு மூடுறீங்க இவ்ளோ ஒர்க்கர்ஸ் என்ன பண்ணுவாங்க எதுக்கு தேவையில்லாத வேலை பாக்குறீங்க என பேச நீ பண்ண வேலைக்கு தான் உனக்கு பனிஷ்மென்ட் இனிமே யார் வாழ்க்கையிலும் நீ விளையாடவே கூடாது என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது அர்ஜுனின் கம்பெனியை இழுத்து மூடுகிறார் மேகனா.