நயவஞ்சகத்தால் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் கோதை.! மொத்தகுடும்பதையும் நடுத்தெருவுக்கு அனுப்பிய அர்ஜுன்.! தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் அர்ஜுன் வண்டவாளத்தை வீடியோ போட்டு காட்டியதால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள், உடனே அர்ஜுனை கோதை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் அது மட்டும் இல்லாமல் சரஸ்வதி கார்த்தி என அனைவரும் வீட்டை விட்டு வெளியே போக சொல்ல அர்ஜுன் ராகினி பின்னாடி நின்று சிரித்துக் கொண்டிருக்கிறார் இதனால் அனைவரும் கடுப்பாகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ஏதோ பெரிய வில்லங்கமான வேலையை செய்துள்ளார் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிகிறது ஆனால் என்ன செய்துள்ளார் என்பது புரியாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஒரு புது ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அர்ஜுன் மொத்த சொத்தையும் ராகினி பேரில் எழுதி அர்ஜுன் வாங்கியுள்ளார் இது தெரியாமல் அனைவரும் ஏதேதோ பேச உடனே அர்ஜுன் சொத்து டாக்குமெண்ட்டை எடுத்து வீசுகிறார் அதை பார்த்த கார்த்தி அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவிடம் ஆமாப்பா மொத்த சொத்தும் ராகினி பேரில தான் இருக்கு எனக் கூற நடேசன் அதிர்ச்சி அடைகிறார்.

உடனே நடேசன் அர்ஜுன் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார் அதற்கு ராகினி விடுங்கப்பா அவர் இப்ப என்ன தப்பா செஞ்சிட்டாரு என நடேசனையே தட்டி விடுகிறார் ராகினி இதனால் மனம் உடைந்து நிற்கிறார் கோதை. அதுமட்டுமில்லாமல் கோதை சீ நீ எல்லாம் என் பொண்னா உங்களுக்கு சொத்து தானே வேணும் மொத்த சொத்தையும் நீங்களே வச்சுக்கோங்க நாங்க வெளியில போறோம் என ஆவேசப்பட்டு வெளியே செல்கிறார். அவருடன் வசு கார்த்தி நடேசன் சரஸ்வதி என அனைவரும் வெளியே செல்கிறார்கள்.

அர்ஜுன் தெனாவட்டாக இவர்கள் வெளியே போவதை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் குடும்பம் மொத்தமும் நின்று கோதை குடும்பத்தை வெளியே அனுப்பிவிட்டதை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.

கோதையின் மொத்த குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்துள்ளது இனி சரஸ்வதி வீட்டிற்கு அனைவரும் செல்வார்களா தமிழ் ஏற்றுக் கொள்வாரா, ஏனென்றால் ஏற்கனவே அர்ஜுன் பேச்சைக் கேட்டுக் கொண்டு தமிழை விரட்டி அடித்தார்கள் அதனால் அதை மனதில் வைத்துக்கொண்டு தமிழ் என்ன சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.