முதன்முறையாக கோதையை கண்கலங்க வைத்த வசு.! அர்ஜுனுக்கு ராகினி வச்ச செக்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

thamizhum saraswathiyum september 18 episode
thamizhum saraswathiyum september 18 episode

Thamizhum saraswathiyum september 18 episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கார்த்தி, தமிழ் கம்பெனிக்கு பொறுப்பு ஏற்றுகிறார் அதனால் அனைவரும் கைத்தட்டுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த கம்பெனியின் வளர்ச்சிக்கு நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என தொழிலாளிகளிடம் கார்த்தி பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் கார்த்தி படிப்பு என்பது முக்கியம் இல்ல படிப்பை விட நேர்மையும் உழைப்பு இருந்தா கண்டிப்பா வெற்றி அடைவோம் அது என் அண்ணனை பார்த்து நான் தெரிஞ்சுகிட்டேன் எனக் கூறுகிறார் அனைவரும் கைதட்டுகிறார்கள்.

அடுத்த காட்சியில் அர்ஜுனின் அம்மா ராகினிக்கு பால் எடுத்துக் கொண்டு கொடுத்து கரெக்ட் செய்ய பார்க்கிறார் அப்பொழுது ராகினிக்கு வளைகாப்பு வைக்க முடிவு செய்து ராகினியிடம் கூறுகிறார். ஆனால் ரோகிணி அது எதுக்கு இப்ப எனக் கூற அந்த சமயத்துல அர்ஜுன் வந்து கண்டிப்பா வளைகாப்பு நடத்தி தான் ஆகணும் உனக்கு எப்படி நடத்தணும்னு தோணுதோ அதை சொல்லு கிராண்டா பண்ணிடலாம் என அர்ஜுன் கூறுகிறார்.

thamizhum saraswathiyum sep 18
thamizhum saraswathiyum sep 18

ஆனால் அர்ஜுனின் அம்மா இப்போதைக்கு பிரம்மாண்டமாக செய்ய தேவை இல்லை இப்பதான் நம்ம வீட்ல பிரச்சனையே முடிஞ்சு கொஞ்சம் அமைதியா இருக்கு வளைகாப்பு கோவிலில் வைத்துக் கொள்ளலாம் என கூறுகிறார். அதற்கு ராகினியும் ஓகே என கூறி விடுகிறார் ஆனால் வளைகாப்பிற்கு எங்கள் அம்மா வர வேண்டும் எனக்கு ஆசையாக இருக்கிறது, என்னுடைய ஆசையா நிறைவேற்ற முடியுமா என கேட்க அதற்கு அர்ஜுனின் அம்மா அப்படி ஒரு ஆசை இருந்துச்சுன்னா அந்த ஆசையை அடியோடு மறந்திடு என கூறிவிட்டு செல்கிறார்.

thamizhum saraswathiyum sep 18 2
thamizhum saraswathiyum sep 18 2

ஆனால் அர்ஜுன் ராகினியிடம் சமாதானப்படுத்தி நான் எங்க அம்மாகிட்ட பேசுகிறேன் உங்க அம்மா வருவாங்களா நான் கூப்பிட்டால் என கேட்க ராகினி  சந்தோஷத்துடன் அதெல்லாம் கண்டிப்பா வருவாங்க என கூறுகிறார். கார்த்தி கம்பெனியின் வளர்ச்சிக்காக ஒரு சில ஐடியாக்களை கொடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் வேலை செய்யும் நேரத்தையும் கொஞ்சம் மாற்ற வேண்டும் என கூறுகிறார் எதுவாயிருந்தாலும் கம்பெனி நல்லதுக்கு என்றால் நீ என்னை கேட்காமல் செய் என கார்த்தியை மோட்டிவேட் பண்ணுகிறார் தமிழ்.

ஆனால் நமச்சி கார்த்திக்கு அந்தளவு அனுபவம் கிடையாது எதுவா இருந்தாலும் நீயே முடிவு எடு என நமச்சி கூற அர்ஜுனை ரொம்ப நம்பி நிறைய அடிபட்டுட்டான் இதுக்கு மேல அவனுக்கு ஒரு தன்னம்பிக்கை வேணும்னா அவனே ஒரு முடிவை எடுக்கட்டும் என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். அதற்கு நமச்சி தமிழைப் பார்த்து பெருமிதம் அடைகிறார்.

thamizhum saraswathiyum sep 18 23
thamizhum saraswathiyum sep 18 23

அடுத்த காட்சியில் சரஸ்வதி தங்கியிருக்கும் ஹவுஸ் ஓனர் மேலே முருங்கைக்காய் கொடுக்க வருகிறார் அப்பொழுது அவரைப் பார்த்த வசு என் குழந்தைக்கு நீ தான் அம்மா சரஸ்வதி நீ வச்சிருந்தா தான் கத்த மாட்டேன் என்கிறான் அது மட்டும் இல்லாம உன்கிட்ட இருந்த குழந்தை ஆரோக்கியமா இருக்கும் என ஹவுஸ் ஓனரை குத்தி காட்டுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார் இதை கோதை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.

ஹவுஸ் ஓனர் போன பிறகு வசு என்னுடைய குழந்தைக்கு அம்மா சரஸ்வதி தான் சரஸ்வதி குழந்தை பெத்துக்கிட்டா அது இரண்டாவது குழந்தை தான் அந்த குழந்தையை நான் வளப்பேன் என் குழந்தையை சரஸ்வதி தான் வளர்ப்பா என ரெண்டு பேரும் பாசமழையை பொழிந்து கொள்கிறார்கள் அந்த சமயத்தில் இவர்களின் பாசப்பிணைப்பை பார்த்து கோதை கண்ணீர் வடிக்கிறார் இத்துடன் எபிசோடு முடிகிறது.