கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியும் தமிழ்த் திருமணம் ஆனதை மேக்னாவிடம் சொன்ன அர்ஜுன்.! சுக்குநூறாக உடையும் மேகனாவின் மனசு..

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கடைசியாக மேக்னா அவார்ட் வாங்கும் பங்ஷனுக்கு செல்கிறார் அப்பொழுது அங்கு தமிழும் செல்கிறார் அவார்ட் வாங்கிய மேகனா இதற்கு காரணம் தமிழ் தான் என பெருமையாக பேசுகிறார் அப்பொழுது தமிழ் ஸ்டேஜ் ஏறி அனைவருக்கும் இன்டர்டியூஸ் பண்ணி வைக்கிறார் மேகனா இப்படி சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் தனக்கு பரிசு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தால் பெரிய கம்பெனி முதலாளி ஒருவர் இழிவாக பேசுகிறார் மேகனாவை.

மேகனாவிடம் சென்று அழகால்தான் உனக்கு வாய்ப்பு கிடைத்தது அது மட்டும் இல்லாமல் பெண்கள் என்றாலே மிக எளிதாக வாய்ப்பை பெற்று விடுவார்கள் அவர்களின் அழகால் எதை வேண்டும் என்றாலும் சாதிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார் ஒருவர் இதனால் மேக்னா கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது.

பிறகு தமிழ் அந்த கம்பெனி முதலாளியிடம் அவர்களுக்கு திறமை இருக்கிறது அதனால் தான் பரிசு கிடைத்தது நீங்கள் பொறாமையில் பொங்கி எழுகிறீர்கள் அது மட்டும் இல்லாமல் பெண்களை இழிவாக பேசுவது மிகவும் மட்டமான செயல் என பேசுகிறார் இதனால் மேக்னா ஓடிவந்து தமிழை கட்டிப்பிடித்து விடுகிறார்.

இந்த நிலையில் ஒரு புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ  வீடியோவில் அர்ஜுன் எப்படியாவது தமிழுக்கு திருமணமானதை சொல்லியாக வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார் தன்னுடைய மாமாவிடம், அந்த சமயத்தில் நமச்சி வர தமிழுக்கு திருமணமானதை மறைத்து தானே எல்லா வேலையும் பண்ணிட்டு இருக்கீங்க கண்டிப்பா நான் சொல்லுவேன் எனக் கூறுகிறார் இதனால் நமச்சி பதட்டத்தில் இருக்கிறார்.

அடுத்த காட்சியில் மேக்னாவை பார்ப்பதற்காக மேக்னா வீட்டிற்கு அர்ஜுன் வர அப்பொழுது ராஸ்கல் நீயா இங்க ஏன் வந்தா என அர்ஜுன் கழுத்து பிடித்து தள்ளுகிறார்கள் அந்த சமயத்தில் நடுவீதியில் இருந்து கொண்டு நீங்க நினைப்பது அனைத்தும் தவறு தமிழுக்கு திருமணம் ஆகிவிட்டது குழந்தை கூட பிறக்க போகுது என கூற இதனால் மேக்னா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.