தம்பி திரைவிமர்சனம்.!

thambi review
thambi review

சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் சில இயக்குனர்களின் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆசைப்படுவார்கள் அந்த வகையில் ஜீத்து ஜோசப் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் இவர் ஒரு மலையாள சினிமாவின் இயக்குனர் இவர் இயக்கத்தில் இன்று தம்பி திரைப்படம் வெளியாகியுள்ளது. தம்பி வெற்றி பெற்றாரா என்று பார்க்கலாம்.

படத்தின் கதை

கார்த்தி திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் இந்த தம்பி திரைப்படத்தில் கார்த்தி திருடனாக வாழ்க்கையில்  ஜாலியாக இருக்கிறார், ஒருநாள் அவரை போலீஸ் துரத்துகிறது, அங்குதான் கார்த்தியின் வாழ்க்கை மாறிப் போகிறது. ஊட்டியில் மிகப்பெரிய அரசியல் பிரமுகராக இருப்பவர் சத்யராஜ் அவருக்கு மனைவியாக சீதா நடித்துள்ளார் அம்மாவாக சவுகார்ஜானகி நடித்துள்ளார், அதேபோல் மகளாக ஜோதிகா நடித்துள்ளார், ஆனால் சத்யராஜ் மகன் சிறுவயதிலேயே காணாமல் போகிறார்.

காணாமல் போய் 15 வருடங்கள் கழித்து கார்த்தி உருவத்தில் மீண்டும் வீடு வந்து சேர்கிறார் இது மகிழ்ச்சியாக இருந்தாலும், தம்பியை தொலைத்த சோகத்தில் இருக்கும் அக்கா, மற்றொரு பக்கம் வந்திருக்கும் தம்பியை கொண்டாட முடியாமல் போகிறது அக்காவிற்கு, இந்தநிலையில் மலைவாசி மக்களுக்கு ஒரு பெரும் பிரச்சனை, அந்தப் பிரச்சனையை கொடுப்பது கார்ப்பரேட் நிறுவனம் தான். அதனால் அங்கு உள்ள மக்கள் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறது, அந்த மலைவாழ் மக்கள் வாழும் நிலத்தில் என்ன இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவர்களுக்காக போராடும் சத்யராஜுக்கு பெரும் பிரச்சினை வருகிறது.

அதுமட்டுமில்லாமல் கார்த்தியின் உயிருக்கும் ஆபத்து வருகிறது, சத்யராஜ் மகன் காணாமல் போனதில் பின்னணி என்ன, உண்மையில் என்னதான் நடந்தது, தம்பி கார்த்தியை கொலை செய்யத் துணிந்தது யார், என்பதுதான் தம்பி படத்தின் கதை.

படத்தில் உள்ளது.

கார்த்தி நடிப்பு மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று அந்த நம்பிக்கை வீண் போகவில்லை, கைதி படத்தால் கார்த்தியின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துவிட்டது, அதே நம்பிக்கை தான் தற்பொழுது தம்பி மீது திரும்பியுள்ளது, கார்த்திக்கு ஒரு அருமையான வாய்ப்பு என்று கூட கூறலாம், திருடனாகவும் மகனாகவும் தனது நடிப்பை மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சில இடங்களில் கார்த்தியின் முக்கியத்துவம் குறைவது போல் தெரியும் ஆனால் ஆங்காங்கே சுவாரசியம் காட்டுகிறார் இயக்குனர், அதேபோல் ஜோதிகாவை பற்றி கூற வேண்டுமென்றால் தைரியமாக பெண்ணாக ராட்சசி திரைப்படத்தில் பார்த்திருப்போம் ஜோதிகாவை ஆனால் இந்த திரைப்படத்தில் பாசமும் ஏக்கமும் கண்ணில் தெரியும் அளவிற்கு அக்கா ரோலில் நடித்துள்ளார். அவரின் கோபம் அமைதியின் பின்னணியை கடைசியில் மட்டும்தான் தெரியும் என்ற வகையில் அற்புதமாக நடித்துள்ளார்.

அதேபோல் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் தனது காதலனை பல வருடங்கள் கழித்து பார்க்கம் அதிர்ச்சியில் இருக்கிறார், அம்மாவாக நடித்த சீதா, மகன் காணாமல் போன ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் ஜோதிகாவை அமைதிப்படுத்த முடியாத தாயாகவும் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல் சத்யராஜ் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நடிப்பில் அவரை அடித்துக் கொள்ளவே முடியாது, ஏனென்றால் திறமைவாய்ந்த நடிப்பை தம்பி திரைப்படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார், ஒரு தலைவனாகவும், தந்தையாகவும் இவர் சந்திக்கும் சூழ்நிலைகள் நம்மை கொஞ்சம் பரிதாபப்பட வைக்கும். ஆனால் அடுத்த பாதி இவரா இப்படி என கேள்வி கேட்க வைக்கிறது, எதிர்பார்க்க முடியாத கதை கோணத்தில் சிக்கி விடுகிறார்.

அதேபோல் சவுகார்ஜானகி இந்த திரைப்படத்தில் கார்த்திக் மிகப்பெரிய சவாலாக இருக்கிறார், வாய் பேச முடியாமல் தான் சொல்ல வருவதை புரிய வைக்க முடியாமல் அவர் அவஸ்தை படுவது கார்த்திகே ஒரு சவால் தான். காமெடிக்காக டிவி சேனல் பிரபலம் அஸ்வந்த், சரளமாக வாய் பேசி வரும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார், பாலா பாலா சிங், இளவரசு, அம்மா அபிராமி என பலர் இந்த திரைப்படத்தில் தங்களது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

ஜீத்து ஜோசப் கதையை மிகவும் நேர்த்தியாக நகர்த்தியுள்ளார் அக்கா வீட்டில் இருந்தால் இன்னொரு அம்மாவுக்கு சமம் என்றும் பேசும் வசனங்கள் திரையரங்கே அதிர்கிறது. ஸ்கிரீன்பிளே மலையாள படங்களுக்கே உரிய ஸ்டைல் என்று கூறலாம், இறந்தாலும் முதல் பாதி சற்று மெதுவாக செல்வது போல் இருந்தாலும் அடுத்தடுத்து டிவிஸ்ட் வைத்து சூடு பிடிக்க வைக்கிறது கதை. பாடல்கள் கொஞ்சம் அலட்டல் இல்லாத ராகம், கோவிந்த மேனன் இசையில்.

இயக்குனர் கதையை டிவிஸ்ட் வைத்து எடுத்தது அற்புதம். அதேபோல் சத்யராஜ் ஜோதிகா கார்த்தி என எதிர்பாராத டிவிஸ்டுகள் ரசிக்க வைக்கும், கிளைமாக்ஸ் ரசிகர்களின் நாடித் துடிப்பை அதிகரிக்கச் செய்தது. படத்தில் முதல் பாதி மெதுவாக செல்வதுபோல் இருந்தது கொஞ்சம் கவலை தான், மொத்தத்தில் தம்பியை பார்க்க கட்டாயம் செல்லலாம்.

தம்பி = 3 / 5