வெளியானது வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள்..! ஒரே மணி நேரத்தில் லட்சகணக்கில் குவிந்த லைக்குகள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வரும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பதே உண்மை.

இன் நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை எப்படி மாபெரும் வெற்றி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் அயராது போராடி வந்த விஜய் அவர்கள் தற்பொழுது தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் இயக்குனர் வம்சி அவர்களுடன் கைகோர்த்துள்ளார் .

இவர் இணைந்த கூட்டணியில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு இந்த திரைப்படம் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாக உள்ளது அது மட்டும் இல்லாமல் இதில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா நடிகை இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

அதேபோல இந்த திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் துணிவு திரைப்படத்தில் தான் போட்டியிட போவதாக செய்திகள் வெளிவந்த நாளிலிருந்து ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் நாளுக்கு நாள் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கிறது அந்த வகையில் தற்பொழுது பஸ்ட் சிங்கிள் ப்ரோமோ ஒன்று வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த பாடல்..!

Leave a Comment