தளபதி விஜய் பாடகர் எஸ்பிபி உடன் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம்..!! இதோ உங்களுக்காக.

0

thalapathy vijay with singer spb photo:பாடகர் எஸ் பி பி அவர்கள் உடல்நலக்குறைவால் சமீபத்தில் தான் காலமானார். அந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவரின் மகன் எஸ்பி சரண் அவர்கள் அவரின் உடல் தகனம் செய்துதுள்ள இடத்தை பெரிய மியூஸியம் போல் கட்டப் போவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

பாடகர் எஸ்பிபி அவர்கள் இறந்தபோது அவருக்கு நேரடியாக வந்து நடிகர் இளையதளபதி விஜய் அவர்கள் இரங்கல் தெரிவித்து அவரின் உடலை அடக்கம் செய்து விட்டு போனது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அந்த அளவிற்கு விஜய்க்கு எஸ்பிபி அவர்களை பிடிக்குமாம். அதனால் தான் கொரோனாவை பொருட்படுத்தாமல் அவர் நேரில் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

விஜய் தற்போதெல்லாம் பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொண்டு மக்களுடன் மிகவும் எளிமையான முறையில் பேச பழக ஆரம்பித்துள்ளார். அவரின் ரசிகர்களுக்கு இது பெரிய அளவில் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இளைய தளபதி விஜய் அவர்கள் எஸ்பிபி உடன் சிரித்து பேசி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களால் இணையதளத்தில் பதிவிடப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் தான் விஜய் எஸ்பிபி உடன் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.இதோ அந்த புகைப்படம்.

spb
spb