15 வயதில் சுற்றுலா சென்ற தளபதி விஜய்..! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வரும் நடிகர் என்றால் அவர் தளபதி விஜய் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகரை பற்றி சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் உரையாடுவதும் பேசுவதும் புகழ்வதும் வழக்கமாக அமைந்துவிட்டது.

இதனை தொடர்ந்து தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகியது மட்டும் இல்லாமல் அவருக்கென ஒரு ரசிகர் மன்றமே உருவாகிவிட்டது அது மட்டும் இல்லாமல் இவர் எண்பதுகளில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய தந்தை இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்க விட்டாலும் அதன் பிறகு விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது அதன் பிறகு ரொமான்ஸ் காமெடி நடனம் என சிறப்பாக தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டிய தளபதி விஜய் அவர்கள் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார்.

தற்பொழுது தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தினை வம்சி அவர்கள் இயங்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.

பொதுவாக தளபதி திரைப்படம் என்றாலே கதாநாயகிக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள் ஆனால் கதையில் அவருக்கு முக்கியத்துவம் இருக்காது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது மேலும் இந்த திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிட உள்ளதாக பட குழுவினர்கள் அறிவித்த நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.

இன்நிலையில் தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய 15 வயதில் சுற்றுலா சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது வெளிவந்த புகைப்படம் சமூகவலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

vijay-1
vijay-1

Leave a Comment