கமலுக்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கவிருக்கும் தளபதி விஜய்..! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க..

0
kamal
kamal

இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமா உலகில் சித்திரம் பேசுதடி என்னும் படத்தை இயக்கிய தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து மிஷ்கின் எடுத்த அஞ்சாதே, யுத்தம் செய், சைக்கோ, துப்பறிவாளன் போன்ற படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் இப்பொழுது கூட ஆண்ட்ரியா , விஜய் சேதுபதியை வைத்து பிசாசு 2 என்னும் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படம் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் மிஷ்கின் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது . இயக்குனர் மிஷ்கின் உலகநாயகன் கமலஹாசனை வைத்து புத்தர் என்னும் படத்தை இயக்க முடிவு எடுத்தார் அந்த சமயத்தில் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் உலகநாயகன் கமலஹாசனை வைத்து தசாவதாரம்.

படத்தை எடுத்து வந்தார் அதனால் அப்பொழுது புத்தர் படத்திற்கு கமல் கால் சீட் கொடுக்க முடியாமல் போனதாம்.தற்பொழுது கமலஹாசன் பல திரைப்படங்களில் கமிட்டாகி வந்தாலும் அவரது வயது அவரது நடிப்புக்கு முற்றுப்புள்ளியாக ஒரு கட்டத்தில் அமையும் இந்த நிலையில் நடிகர் விஜயின் நடிப்பில் புத்தர் திரைப்படத்தின் கதையை புதுப்பித்து தான் இயக்க உள்ளதாக மிஷ்கின் கூறி இருக்கிறார்.

விஜய், மிஸ்கினும் இணைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது ஏனென்றால் சித்திரம் பேசுதடி படத்தை மிஷ்கினுடன் உடன் விஜய் திரையரங்கில் பார்த்தார் படம் ரொம்ப பிடித்து போனதாம் அப்பொழுதே மிஷ்கினிடம்  ஏன் வந்து இந்த படத்தின் கதையை  என்னிடம் சொல்லவில்லை நீங்கள் கதை சொல்லி இருந்தால் நான் நடித்திருப்பேன் என்று மிஷ்கினுடன் வருத்தப்பட்டாராம்.

அதற்கு மிஷ்கின் நான் உங்களிடம் வந்து கதையை சொல்லி இருந்தால் உங்கள் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கதையில் பல மாற்றங்களை செய்ய சொல்வார் அதற்கு எனக்கு செட்டாகாது என சொன்னாராம். அதனால் அப்பொழுது இவர்கள் இருவரும் இணையவில்லையாம். ஆனால் தற்பொழுது புத்தர் படத்தின் மூலம் இவர்கள் இணை அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.