தனது காதலனுக்காக விஜய்யிடம் சிபாரிசு செய்த நயன்தாரா.! விஜய் என்ன சொன்னார் தெரியுமா.? இதனால் விஜய் இன்னும் முன்னிலையில் இருக்கிறாரா

thalapathy vijay said no to nayanthara: இளையதளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவரின் இந்த 65ஆவது திரைப்படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்க இருந்தது ஆனால் அவரின் கதை பிடிக்காததால் விஜய் நடிக்க மறுத்துவிட்டார். பின்பு அதனை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் பரிந்துரையின் பேரில் கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்கள் விஜய்யிடம் ஒரு கதையை கூறியுள்ளார்.

மேலும் இந்தநிலையில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் அவர்களும் விஜயை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக பேசப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாரா விஜயிடம் விக்னேஷ் சிவனின் கதையை கேட்க சொல்லி சிபாரிசு செய்தாராம்.

ஆனால் அதற்கு விஜய் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நயன்தாரா வருத்தத்தில் உள்ளதாக தெரியவருகிறது. மேலும் விஜய் தனது 65வது திரைப்படத்தை எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment