தளபதி விஜயின் அடுத்த மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனம் இதுவா.?

தளபதி விஜய் தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தற்போது வசூல் மன்னனாக வலம் வருகிறார் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படங்கள் அனைத்தும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது, அதுவும் விஜயை வைத்து இயக்கிய திரைப்படம் பிசினஸில் 200 கோடி வரை இருப்பதால் விஜய்யை வைத்து தயாரிக்க பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்..

அந்த வகையில் தளபதி விஜய்யின் அடுத்த அடுத்த திரைப்படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி 65

தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் நடித்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார், இந்த நிலையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தளபதி 65 ஆவது திரைப்படத்தில்  நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படத்திற்கு தமன்  தான் இசையமைக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சன்  நிறுவனம் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது.

தளபதி 66

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல் திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது, மெர்சல் திரைப்படத்தில் சம்பாதித்ததை அதன் பிறகு பல திரைப்படங்களில் ஒப்புக்கொண்டு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தேனாண்டாள் பலிம்ஸ் நிறுவனத்திற்கு கை கொடுக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை பெரும்பாலும் கிராமத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.

தளபதி 67

மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்து  விநியோகம் செய்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார் அதனால் கொஞ்சம்  நஷ்டம் ஏற்படும் என தெரிகிறது அதனால் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தை லலித் குமார் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment