தளபதி விஜய் 17 வருடமாக யுவன் சங்கர் ராஜாவை ஒதுக்கியதற்க்கு இதுதான் காரணமாம்!!.வெளிவந்த தகவல்.

0

thalapathy vijay neglect yuvan shankar raja music to his movie for 17 years reason revealed now: தமிழ் சினிமாவில் தற்போது வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் அதற்கு காரணம் இவரின் படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. இதனால் பல இயக்குனர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் படத்தின் மேல் ஆர்வம் காட்டுகின்றனர்.

அப்படி கிடைத்தவர்கள் தன்னுடைய திறமையை விஜய் படம் மூலம் திரையுலகில் வெளிப்படுத்துகின்றனர். இதேபோல் விஜய்யின் பழைய படங்களில் பல இசையமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி பிரபலமான இசையமைப்பாளர்களுடன் இணைந்து வெற்றிகரமான பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் தளபதி விஜய் 17 வருடமாக எந்த ஒரு பாடலுக்காகவும் படத்தில் இணையவில்லை. இது சினிமா துறையில் உள்ள பலருக்கு சந்தேகமாகவே உள்ளது.

தளபதி விஜய் கடைசியாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்த திரைப்படம் புதிய கீதை. இந்த படம் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாயவின் பாடல்கள் பல வெற்றிகளை பெற்று கொடுத்தது. இருப்பினும் அந்தப் படத்திற்கு பிறகு 17 வருடமாக விஜய் இவரை தனது படத்திற்க்கு இசையமைக்க இயக்குனர்களிடமும் பரிந்துரை செய்யவில்லை என்பது தெரியவருகிறது.

ஆனால் தற்பொழுது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் ஒரு இசையை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது