தளபதி விஜய் நடித்த கடைசி 10 திரைப்படங்களின் வசூல் நிலவரம்.! விண்ணைத் தொடும் அசூர வளர்ச்சியில் விஜய்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது வசூல் மன்னனாக வலம் வருகிறார், இவர் கடைசியாக நடித்த பிகில் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில் விஜய் நடித்த கடைசி பத்து திரைப்படங்களின் வசூல் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

பிகில் திரைப்படம் தமிழகத்தில் 143 கோடியும், உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்தது, இதனைத் தொடர்ந்து சர்கார் திரைப்படம் தமிழகத்தில் 125 கோடியும், உலகம் முழுவதும் 254 கோடியும் வசூல் செய்தது, அட்லி இயக்கத்தில் வெளியாகிய மெர்சல் திரைப்படம் தமிழகத்தில் 120 கோடியும் உலகம் முழுவதும் 250 கோடியும் வசூல் செய்தது.

அதேபோல் பைரவா திரைப்படம் தமிழகத்தில் 60 கோடிக்கும் உலகம் முழுவதும் 114 கோடியும் வசூல் செய்தது, அட்லி இயக்கிய தெறி திரைப்படம் தமிழகத்தில் 75 கோடியும் உலகம் முழுவதும் 150 கோடியும் வசூல் செய்துள்ளது, விஜய் நடிப்பில் வெளியாகிய புலி திரைப்படம் தமிழகத்தில் 45 கோடியும் உலகம் முழுவதும் 80 கோடியும் வசூல் செய்தது, கத்தி திரைப்படம் தமிழகத்தில் 65 கோடியும் உலகம் முழுவதும் 127 கோடி வசூல் செய்தது.

இதனைத்தொடர்ந்து ஜில்லா திரைப்படம் தமிழகத்தில் 45 கோடியும்  உலகம் முழுவதும் 75 கோடியும் வசூல் செய்தது, அதேபோல் தலைவா திரைப்படம் ஒட்டுமொத்தமாக 70 கோடி வசூல் செய்தது. மேலும் துப்பாக்கி திரைப்படம் தமிழகத்தில் 75 கோடியும் உலகம் முழுவதும் 125 கோடியும் வசூல் செய்தது.

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு வசூலில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது விஜய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment