ரஜினியின் பிளாக்பஸ்டர் படத்தில் நடித்துள்ள தளபதி விஜய்.! இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ

சூப்பர் ஸ்டார் என்கின்ற பட்டத்தோடு பறந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது இதனால் அடுத்த படத்தை மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக கொடுக்க இளம் இயக்குணர் நெல்சன் திலிப் குமாருடன் கூட்டணி அமைத்து..

ஜெயிலர் படத்தில் ரஜினி விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது அதன் காரணமாக ரஜினி உடன் கைகோர்த்து மலையாள டாப் நடிகர் மோகன்லால், கன்னட டாப் நடிகர் சிவ ராஜ்குமார், மற்றும் விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் இடம்பெற்று உள்ள 30 நிமிட பிளாஷ்பேக் காட்சி எடுக்கப்பட்டது அதை அண்மையில் ரஜினி  பார்த்து நெல்சனை மனமாற பாராட்டினாராம் நிச்சயம் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் என ரஜினியும் சரி, படக்குழுவும் ரொம்ப நம்பி இருக்கிறதாம்.. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக அவர் ஏழு நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது இப்படி எப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.  மக்கள் மற்றும் ரசிகர்கள் எப்படி ரஜினி பார்க்கிறார்களோ அதே போல ஒரு சில நடிகர்களும் ரஜினியை தீவிரமாக பின் தொடர்கின்றனர் அந்த வகையில் விஜய்யும் ஒருவர்..

ஆனால் இருவரும் இணைந்து மிகப்பெரிய ஒரு படம் பண்ண வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு ஆனால் நடக்கவில்லை.இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர் ஏஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “நான் சிகப்பு மனிதன்” திரைப்படத்தில் இடம் பெறும் துவக்க காட்சி ஒன்றில் விஜய் நடித்திருப்பார்.. அந்த பழைய வீடியோ தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்..

Leave a Comment