மிஷ்கினால் தளபதி விஜய்க்கு வந்த தலைவலி..! கடும் கோபத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ்..!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் தற்போது தமிழகமெங்கும் மிகவும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் குடும்ப கதை கொண்ட இந்த வாரிசு திரைப்படம் பல்வேறு இல்லத்தரசிகளையும் ரசிகர்களையும் இலகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் வசூலில் மிகவும் பிசியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான வேலையை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்த நிலையில் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இயக்கப் போகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் லோகேஷ் கதை சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி படம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் லோகேஷ் தளபதியை வைத்து 67வது திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பல்வேறு அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இதில் முக்கிய வில்லனாக பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்கள் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்திகளும் வெளிவராமல் கடைசி வரை மௌனம் காத்திருப்பது வழக்கம். அதுமட்டும் இல்லாமல் சக நடிகர்களுடன் கூட தங்களுடைய கதாபாத்திரம் பற்றி பேசுவது மிகவும் தவறான செயல் என லோகேஷ் கனகராஜ் கருதி வருகிறார்.

ஆனால் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் ஏகத்துக்கும் திரைப்படம் பற்றிய பல்வேறு விஷயங்களை பொது மேடைகளில் பேசுவது பலருக்கும் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது மேலும் இவ்வாறு வெளியிடுவதன் மூலமாக படத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்து விடுவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திலிருந்து மிஸ்கினை நீக்கிவிடலாம் என விஜய் நினைக்கும் அளவிற்கு கூட மிஸ்கின் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இயக்குனர் மிஸ்கினை வைத்து படம் சம்பந்தப்பட்ட பல்வேறு காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதன் காரணமாக இனிமேல் மிஷினை இந்த திரைப்படத்திலிருந்து நீக்குவது மிகவும் கடினமான செயல் என்பதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் தான் இனிமேல் அவரை கண்ட்ரோலாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்படி இல்லை என்றால் படம் வெளி வருவதற்கு முன்பாகவே ரசிகர்கள் அனைவருக்கும் கதை என்னவென்று தெரிந்துவிடும்.

Leave a Comment