தளபதி 67 திரைப்படத்தின் அடுத்த ஷூட்டிங்க்கு மாஸ் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டிலில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு சாக்லேட் செய்யும் நபராகவும் அதே சமயம் ஒரு மாஸ் என்ரியும் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய்.

தற்காலிகமாக தளபதி 67 என்று அழைத்து வந்த நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் லியோ என்று வைத்துள்ளார்கள். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் நிலையில் தற்போது பட குழுவினர் அடுத்த கட்ட படபிடிப்பிற்க்கு காஷ்மீர் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி செம்ம வைரலானது அதனைத் தொடர்ந்து தற்போது படக்குழுவினர் அனைவரும் தனிப்பட்ட ஒரு விமானத்தில் சென்று கொண்டிருக்கும்போது நடிகர் விஜய் ஒரு கேமராவை வைத்து அனைவரையும் வீடியோ எடுக்கும் காட்சி மற்றும் அவருடைய மாஸ் எண்ட்ரி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லியோ என்ற திரைப்படத்தின் மூலம் மறுபடியும் இணைந்து இருக்கிறார்கள். இதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை உயர்த்தி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் உடன் இணைந்து 14 வருடம் கழித்து நடிகை திரிஷா இணைந்து உள்ளதால் ரசிகர்கள் மத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இவர்களுடைய கூட்டணியில் உருவான திருப்பாச்சி, கில்லி, மற்றும் குருவி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது திரிஷா மற்றும் விஜய் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், பிரியா ஆனந்த், உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து முதற்கட்ட படபிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றுள்ள வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment