உயிரை பணையம் வைத்து டூப் இல்லாமல் விஜய் சண்டையிட்ட காட்சிகள்!!வைரலாகும் வீடியோ..

0

thalapathy vijay fight scene without dup video:தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு முன்னணி நடிகராக வலம் வருவதோடு மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் பல ரசிகர்களை தன் வசப்படுத்தி கொண்டுள்ளார். மேலும் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வசூல் ரீதியாக நம்பர் ஒன் இடத்தில் உள்ளவர் தளபதி விஜய்.

இவர் நடித்த சில திரைப்படங்களில் டூப் இல்லாமல் தனது கடின முயற்சியால் சண்டையிடும் வீடியோ வெளியாகியுள்ளது. இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான குஷி திரைப்படத்தில் கவரா பிரிட்ஜ் மேல் ஸ்டாண்ட் மேன் யாரோட உதவியும் இல்லாமல் பங்கி ஜம்பிங் பன்னி இருப்பாரு.

விஜய் போலவே அந்த ஜம்பிங் ஜோதிகாவும் செய்து பார்த்தாராம். ஆனால் அவருக்கு  வரவில்லை என்பதால் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்கி விட்டனர்.

அதனை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தெறி விஜய் 100 அடியில் இருக்கும் பிரிட்ஜிலிருந்து கடலில் குதித்து இருப்பார் அதுவும் டூப் இல்லாமல் எடுக்கப்பட்ட சீன் தான். அதேபோல பத்ரி திரைப்படத்திற்கு அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சண்டையிட்டு இருப்பார்.

இதுபோல ஒவ்வொரு படங்களிலும் அவர் தனது முழு ஈடுபாட்டுடன் நடித்த சில காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகிறது. இதோ அந்த வீடியோ.